ஐரோப்பா

கீவ் நகரை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா;50க்கும் மேற்பட்டோர் படுகாயம்

உக்ரைன் தலைநகரான கீவ் நகரை குறி வைத்து, ரஷ்யா ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யா பல்வேறு வகையான தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கீவ் நகரை குறி வைத்து இன்று அதிகாலை 3 மணியளவில் ரஷ்யா ஏவிய 10 ஏவுகணைகளை உக்ரைன் விமான பாதுகாப்பு படை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது. எனினும் ராக்கெட் ஏவுகணைகளின் உடைந்த பாகங்கள் கீழே விழுந்து நொறுங்கியதில் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஒடேசா பகுதியில் ரஷ்யாவால் ஏவப்பட்ட 10 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்