ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு சென்ற கும்பல் சுற்றிவளைப்பு – சோதனையில் சிக்கிய பொருட்கள்

கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்த 106 கிலோ எடையுள்ள போதைப்பொருளை இந்தோனேசிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஆஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த படகில் பிரிஸ்பேன் நோக்கிச் சென்ற படகில் ஐஸ் போதைப்பொருள் சரக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனேசிய சுங்க முகவர்கள் தெரிவித்தனர்.

போதைப்பொருளை ஏற்றிச் சென்ற படகு சிங்கப்பூரில் இருந்து பிரிஸ்பேன் நோக்கி பயணித்த போது, ​​இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து இந்தோனேசிய சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தோனேசியா வழியாக கப்பலேறி ஜாவா தீவுகளில் இருந்து எரிபொருளை பெற்று இறுதியாக பிரிஸ்பேன் செல்வதே கடத்தல்காரர்களின் திட்டம் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 50 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித