இந்தியா செய்தி

தேயிலை தொழிலாளர்களை கௌரவித்த பிரதமர் மோடி!

இந்தியா, அசாமின் திப்ருகரில் அமைந்துள்ள தேயிலை தோட்டமொன்றுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அவர் அங்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

அத்துடன், மாநிலத்தின் தேயிலைத் துறைக்கு தொழிலாளர்கள் வழங்கிவரும் பங்களிப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

அசாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக எதிர்வரும் ஏப்ரல் 9-ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மே 4-ம் திகதி நடைபெற உள்ளது.

அசாமில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அசாம் கனபரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மூன்றாவது முறையாக வெற்றி பெற தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரம் காட்டி வரும் அதேநேரத்தில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரசாரத்துக்கு சென்றிருந்தவேளையே பிரதமர் தொழிலாளர்களைச் சந்தித்தார்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி