ஆசியா

பாகிஸ்தானில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு போலியோ தொற்றாளர் பதிவு : நோய்த்தடுப்பு இயக்கம் மீது துப்பாக்கிச்சூடு!

பாகிஸ்தானில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு போலியோ நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் டயமர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 மாதக் குழந்தையில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் போலியோ ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.

பல நோய்த்தடுப்பு இயக்கங்கள் தொடங்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் பாகிஸ்தானில் பதிவான 11வது நோயாளி இதுவாகும்.

டாங்கிர் பள்ளத்தாக்கின் ஷேகோ கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் போலியோ குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், சுகாதார பிரச்சாரத்தின் மூலம் “சுற்றுச்சூழலை அழிப்பதாக” குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்தே குறித்த குழந்தைக்கு போலியோ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்