இலங்கை செய்தி

யாழில் பூச்சி கடித்தமையால் ஒருவர் பலி! வைத்தியர்களுக்கு சந்தேகம்

பூச்சி கடித்து நோய்வாய்ப்பட்ட ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (18) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 52 வயதுடை ஒருவருக்கு பூச்சி கடித்த சிறிது நேரத்தில் கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

என்ன வகையான பூச்சி கடித்தது என்பதை குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காண முடியாத நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் பூச்சி தொடர்பில் மிகவும் சந்தேகம் அடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் மிருக விஷம் உட்கொண்டமையினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்.

உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை