இலங்கை

கிராம உத்தியோகத்தர் நேர்முகப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

மார்ச் மாதம் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கிராம உத்தியோகத்தர்களுக்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ தலைமையகத்தின் உள்நாட்டலுவல்கள் பிரிவில் நேர்முகப் பரீட்சை நடத்தப்படும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உரிய தகைமைகளைப் பெற்று இதுவரை அழைப்புக் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்கள் www.moha.gov.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்திலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், நேர்முகப்பரீட்சைக்கு கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் தொடர்பில் இணையத்தளத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பொதுநிர்வாக அமைச்சு தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2023 டிசம்பர் மாதம் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மொத்தம் 4,232 பேர் நேர்காணலை எதிர்கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

அதன்படி, நேர்காணல் முடிவுகளின் அடிப்படையில் மொத்தம் 2,002 நபர்கள் கிராம உத்தியோகத்தர் சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்