இலங்கை செய்தி

இலங்கை பாடசாலைகளில் புதிய நடைமுறை – ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையில் பாடசாலைகளுக்கு AI தொழில்நுட்பம் வரவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு சங்கரீ லா ஹோட்டலில் நடைபெற்ற வெஸ்லி கல்லூரியின் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் “செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் எதிர்கால கற்பித்தல் முறைமை” என்ற தலைப்பில் கல்லூரியின் பழைய மாணவரும் ஐக்கிய அமெரிக்காவின் சென் டியோக் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஆர்.சோமநாதன் சிறப்புரை ஆற்றினார்.

எல்ஸ்டன் கொக், லெனரோல் சசோரர்கள் உள்ளிட்ட பிரசித்தமான பாடகர்களின் நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.

இந்த ஆண்டுப் பூர்த்தி விழாவிற்கு ஜனாதிபதியின் வருகையை அடையாளப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட விசேட நினைவு பரிசொன்றும் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு வௌியிடப்பட்ட சஞ்சிகையொன்றும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டன.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை