இலங்கை

வெளிநாடொன்றில் இருந்து இலங்கைவந்த இருவருக்கு குரங்கு காய்ச்சல்!

வெளிநாட்டில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாய் மற்றும் மகளுக்கே இவ்வாறு குரங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், அவா்கள் தற்போது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகம் வைத்தியா் அசேல குணவா்தன தொிவித்துள்ளாா்.

தந்தைக்கு வௌிநாட்டில் monkeypox தொற்று உறுதியாகி குணமடைந்த பின்னர் நாட்டுக்கு வந்துள்ளமை தொியவந்துள்ளது.

இந்நிலையில் தாய் மற்றும் மகளும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்த வேளை, அங்கு முன்னெடுக்ககப்பட்ட பாிசோதனையில் இருவருக்கும் monkeypox தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்