உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர் பதற்றம் – பாகிஸ்தானில் ஊரடங்கு

மத்திய கிழக்கு போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஈரான் ஹார்முஸ் நீரிணையை தனது கட்டுக்குள்வைத்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள அனைத்து கடைகள், மால்கள் இரவு 8 மணிக்கு மூட வேண்டும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு இந்த வாரம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான ஹோட்டல்கள், ரெஸ்டுரண்ட்டுகளும் இரவு 10 மணிக்கு மேல் செயல்படக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

அனைத்து வகையான திருமண மண்டபம், இரவு 10 மணிக்கு மேல் செயல்பட கூடாது. அனைத்து திருமண விருந்துகளும் இரவு 10 மணியுடன் முடிக்க வேண்டும்.

இது திருமண மண்டபம்- மஹால்கள் மட்டுமின்றி வீடு மற்றும் பண்ணை வீடுகளில் நடத்தப்படும் திருமண விழாக்களுக்கும் பொருந்தும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் மருந்து பொருட்கள் விநியோகம் செய்யும் கடைகள், மருத்துவ ஆய்வகங்கள், மருத்துவமனைகள், எரிபொருள் நிலையங்கள், சிஎன்ஜி ஸ்டேஷன்கள், பேக்கரிகள், பால் மற்றும் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி