இலங்கை

இலங்கையின் புதிய தூதுவர்கள் மற்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் இடையே சந்திப்பு

இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை நேற்று (07) சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், கைத்தொழில் பேட்டை ஸ்தாபிப்பு , கனிமத் துறைகளின் அபிவிருத்தி, கூட்டு முயற்சி விவசாய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி போன்ற துறைகளை அவர்கள் நியமிக்கப்பட உள்ள நாடுகளுடன் இணைந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில் இந்த புதிய தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்