பொழுதுபோக்கு

சலார் முதல் காட்சி தொடர்பில் கேரள திரையரங்குகள் எடுத்த தீர்மானம்

பொதுவாக பிரபல ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது.

மற்ற மாநிலங்களில் இது குறித்து பெரிய கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும் தமிழகத்தில் தொடர்ந்து மாறி மாறி நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் கேரளாவில் 5 மணிக்கு திரையிடப்பட்டு வந்த அதிகாலை காட்சிகளை விரைவில் வெளியாக இருக்கும் சலார் படத்திற்காக அதிகாலை 12:30 மணிக்கே திரையிட இருக்கிறார்கள்.

இதற்காக ரசிகர் மன்றங்கள் இப்போதே டிக்கெட்டுகளை விற்பனை செய்ய துவங்கி விட்டன.

இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் மட்டுமல்ல, மலையாள நடிகர் பிரித்விராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் கேரளாவில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்காக இருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்த படத்தை கேரளாவில் பிரித்விராஜின் சொந்த நிறுவனமான பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் தான் வெளியிட இருக்கிறது,,

அந்தவகையில் தற்போதிருந்தே இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளை கேரள ரசிகர்கள் துவங்கி விட்டார்கள் என்று சொல்லலாம். இந்தப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்