உலகம் செய்தி

தாக்குதல்கள் தீவிரம் – மேலும் லெபனான் மக்களை வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல்

லெபனானில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தெற்கு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அன்சாரியா, அல்-க்ராயெப், ஷப்ரிஹா, சரஃபந்த், அட்லூன் மற்றும் பைசாரியா பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக “ஸஹ்ரானி நதிக்கு வடக்கே செல்ல வேண்டும்” என்று இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. அதனால் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இராணுவம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது” என்று இஸ்ரேல் தரப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ஹிஸ்புல்லா உறுப்பினர்கள், அவர்களின் தளங்கள் மற்றும் போர்க் கருவிகளுக்கு அருகில் இருப்பவர்கள் தங்கள் உயிரையே ஆபத்தில் ஆழ்த்துகின்றனர்” என்று X தளத்தில் வெளியிடப்பட்ட பதிவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்கு லெபனானில் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள், பொதுமக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யும் நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்பு முயற்சிகள் மூலம், லெபனானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய இராணுவம் மீறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி