ஒபெக் கூட்டமைப்பின் முக்கிய தீர்மானம் – கச்சா எண்ணெய் விலையில் சரிவு
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகள் மேலும் சரிந்துள்ளன.
ஆகஸ்ட் மாதத்திற்கான தனது உற்பத்தி இலக்குகளை ஒபெக்+ (OPEC+) கூட்டமைப்பு அதிகரித்துள்ளதால், எண்ணெய் விலை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 71.78 அமெரிக்க டொலராக சரிந்துள்ளது, அதே நேரத்தில் ஒரு பேரல் அமெரிக்க WTI கச்சா எண்ணெய் 68.48 அமெரிக்க டொலராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.”
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இயல்பான எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்கியுள்ளதால், உலகளாவிய விநியோகம் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




