இலங்கை

மனித புதைக்குழி விவகாரம் : கோட்டா மீது குற்றச்சாட்டு!

மனித புதைகுழிகள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொலிஸ் ஆவணங்களில் மாற்றங்களை செய்யதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சர்வதே உண்மைஇ நீதிக்கான திட்டம். இலங்கையில் ஜனநாயகத்திற்கான திட்டம் மற்றும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இணைந்து நேற்று (22.06) அறிக்கையொன்றை வெளியிட்டனர். குறித்த அறிக்கையிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ‘மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்காக கோட்டாபய ராஜபக்ச பொலிஸ் ஆவணங்களில் மாற்றங்களை செய்து உண்மையை மறைக்க முயன்றார்.

2013 இல் மாத்தளையில் பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அந்த பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள ஐந்து வருடங்களிற்கு முந்தைய அனைத்து ஆவணங்களையும் அழித்துவிடுமாறு பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய வேளை கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டார்.

அந்த மனிதபுதைகுழிகள் 1988-89 ஜே.வி.பி. கிளர்ச்சி காலத்தை சேர்ந்தவை என்ற சந்தேகம் காணப்படுகின்றது.

அக்காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச இராணுவ வீரராக அந்த பகுதியில் கடமையாற்றினார். விசாரணைகளில் தலையிட்டு குளறுபடிசெய்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் பொலிஸ் அதிகாரிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்