இலங்கை

நுகேகொடை பேரணியில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை!

  • November 3, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் மேற்படி தகவலை வெளியிட்டார். அத்துடன், குறித்த பேரணி வெற்றியளிக்கும் எனவும், இதற்கு அனைத்து தரப்புகளும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

பொழுதுபோக்கு

D55 படத்தில் இணையும் அந்த நடிகை..! யார் தெரியுமா?

  • November 3, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கின்றார். மேலும், அடுத்தடுத்து 4 படங்களையும் கைவசம் வைத்துள்ளார் D54 படத்தை விக்னேஷ் ராஜா இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். D55 படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். D56 படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். D57 படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். அனிருத் […]

ஐரோப்பா செய்தி

கம்ப்ரியாவில் (Cumbria) தடம் புரண்ட ரயில் – சேவைகள் தாமதமடையலாம்!

  • November 3, 2025
  • 0 Comments

வடமேற்கு இங்கிலாந்தில் அமைந்துள்ளது கம்ப்ரியாவில் (Cumbria) இன்று ரயில் தடம் புரண்டதை தொடர்ந்து ரயிலில் இருந்த 130 பயணிகள் அருகில் இருந்த விடுதி ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிளாஸ்கோ சென்ட்ரலில் (Glasgow Central) இருந்து லண்டன் யூஸ்டனுக்கு (London Euston) பயணித்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன் பெட்டி தடம் புரண்டதாக பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.  […]

பொழுதுபோக்கு

அல்லு அர்ஜூனுக்கு கிடைத்த மிகப்பெரிய விருது

  • November 3, 2025
  • 0 Comments

2025 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் அக்டோபர் 30 ஆம் திகதி வழங்கப்பட்டன. இதில் பல்கலை வித்தகர் (Most Versatile Actor) என்ற மதிப்பு மிகுந்த விருதை அல்லு அர்ஜுன் வென்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்த நம்பமுடியாத கௌரவத்திற்கு தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகளுக்கு நன்றி. இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் தொடர்ச்சியான அன்பு மற்றும் ஆதரவுக்கு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் ஹீரோ – பலரின் உயிரை காப்பாற்றிய நபர்!

  • November 3, 2025
  • 0 Comments

லண்டன் நோக்கி சென்ற ரயிலில் முன்னெடுக்கப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் பலரின் உயிரை காப்பாற்றிய நபர் பற்றி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் அந்த சமயத்தில் கதாநாயகன் போல செயற்பட்டு பலரின் உயிரை காப்பாற்றியுள்ளார். தாக்குதலில் அவரும் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெயர் குறிப்பிடப்படாத ரயில் ஊழியர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேரில் ஒருவர் எனக் குறிப்பிடப்படுகிறது. ரயிலில் நடந்தவற்றின் சிசிடிவி காட்சிகளை பிரித்தானிய காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதில் குறித்த நபர் […]

பொழுதுபோக்கு

“ஆண்பாவம் பொல்லாதது” படத்தின் வசூல் விபரம் வெளியானது

  • November 3, 2025
  • 0 Comments

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்திர் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த “ஆண்பாவம் பொல்லாதது” படம் கடந்த வாரம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் விக்னேஷ்காந்த், ஷீலா ராஜ்குமார், ஜென்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் 4.1 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. […]

உலகம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – ஆரஞ்சு எச்சரிக்கை அமுலில்! பலி எண்ணிக்கை உயர்வு!

  • November 3, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின்   மசார்-இ-ஷெரீப்பில் (Mazar-i-Sharif) நகரில் 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று இடம்பெற்றது. இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளதுடன், 320 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சகம் அச்சம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அதன் நிலநடுக்க தாக்க அமைப்பு குறித்து ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. […]

இந்தியா செய்தி

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்து – 16 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!

  • November 3, 2025
  • 0 Comments

இந்தியாவில்  சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று பொதுப் போக்குவரத்துப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 08 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தெலுக்கான மாநிலத்திற்கு அருகே இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த பயணிகள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதகாவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 02 இலட்சம் ரூபாய் இழப்பீடு […]

இலங்கை

கெஹெலியவின் சொத்து விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • November 3, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ரிட் மனுக்களை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக்கோரி 03 ரிட் மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் இன்று  நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு  முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மனுக்களை பரிசீலனை செய்த நீதிபதி […]

இலங்கை

உலகச் சந்தைக்கு உகந்த அலங்கார மீன்கள்: வடக்கில் அமைச்சர் ஆய்வு

  • November 3, 2025
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி தொழில்துறையை ஆரம்பித்து, அதனை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சவால்கள் மற்றும் எதிர்நோக்கிய வளர்ச்சி வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். கொழும்பு பாதுக்கவில் அமைந்துள்ள ஹரித்த அலங்கார மீன் உற்பத்தி பண்ணைக்கு அமைச்சர் சென்றிருந்தார். அங்கு அலங்கார மீன் உற்பத்தியை பார்வையிட்டதோடு, கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். கடற்றொழில் அமைச்சின் செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச, அலங்கார மீன் உற்பத்தி […]

error: Content is protected !!