உலகம் செய்தி

அமெரிக்காவிற்கு போட்டியாக சீனா களமிறக்கியுள்ள புதிய கப்பல்!

  • November 7, 2025
  • 0 Comments

சீனாவின் மிகவும் திறமையான விமானம் தாங்கி கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று அதிகாரப்பூர்வமாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவை முந்திக்கொள்ளும் முயற்சியில் சீனாவிற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனத் தலைவர் ஜி ஜின்பிங் ( Xi Jinping) இந்த வார தொடக்கத்தில் ஹைனான் (Hainan) தீவில் உள்ள துறைமுகத்தில் குறித்த கப்பலை பார்வையிட்டதுடன், அதனை இயக்கும் விழாவிலும் கலந்துகொண்டார். ஃபுஜியன் (Fujian)  சீனாவின் மூன்றாவது மற்றும் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் […]

இலங்கை

நுகேகொடை பேரணியில் மஹிந்த பங்கேற்பாரா? நாமல் தகவல்!

  • November 7, 2025
  • 0 Comments

நுகேகொடையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ச  பங்கேற்க மாட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  தெரிவித்தார். எனினும், முன்னாள் ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் பேரணி நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “மகிந்த ராஜபக்ச  எப்போதும் மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் நின்றவர். அவரது அரசியலின் கீழ் நாங்கள் அனுபவத்தைப் பெற்று வளர்ந்தோம். எனவே, ஒரு போராட்டத்தை (அரகலய) எவ்வாறு வழிநடத்துவது மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது எங்களுக்குத் […]

பொழுதுபோக்கு

“கும்கி – 2” டிரைலர் வெளியானது

  • November 7, 2025
  • 0 Comments

பிரபுசாலமன் இயக்கத்தில் அறிமுக கதாநாயகன் மதி, அர்ஜுன் தாஸ், சுஸானே ஜார்ஜ், ஆண்ட்ரூஸ், கொட்டாச்சி, ஹரீஷ் பேரடி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கும்கி – 2 டிரைலர் வெளியாகி உள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் கும்கி 2 உருவாகியுள்ளது. நவம்பர் 14 ஆம் திகதி கும்கி 2 வெளியாகின்ற நிலையில், இன்று படத்தின் டிரைலர்  வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இலங்கை

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் – இலங்கைக்கு இடமில்லை

  • November 7, 2025
  • 0 Comments

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் முதல் 30 நாடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலை உலக புள்ளிவிபர நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி கணிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பட்டியலில் தென் சூடான் முன்னிலையில் உள்ளது. அந்த நாடு 24.3 சதவீதம் வளர்ச்சி வீதத்தைப் பெற்றுள்ளது. தென் சூடானை அடுத்து […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் வெடித்த பவர் பேங்கால் பரபரப்பு

  • November 7, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் ஒன்றில் பவர் பேங்க் வெடித்ததின் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளார். மெல்போர்ன் விமான நிலையத்தில் உள்ள குவாண்டாஸ் வணிக பகுதியில் இருந்த நபர் ஒருவனே காயமடைந்துள்ளார். குறித்த பவர் பேங்கை தனிப்பட்ட முறையில் வைத்திருந்த நிலையில், அது வெடித்தது. இதன் காரணமாக விரல்கள் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது சுமார் 150 பேர் அந்தப் பகுதியில் அமர்ந்திருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் விமான […]

வாழ்வியல்

தூக்கமின்மை பாதிப்புக்கு மாத்திரை பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

  • November 7, 2025
  • 0 Comments

தூக்கமின்மை பாதிப்புக்காக பொதுவாக பரிந்துரைக்கப்படும் மெலடோனின் மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் நாள்பட்ட தூக்கமின்மை மற்றும் இதயச் செயலிழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புக்கான ஆபத்தும், நீண்டநாள் உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பும் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தூக்கமின்மை பாதிப்பால் அவதிப்படுபவர்களில், மெலடோனின் சப்ளிமெண்ட் பயன்படுத்தாதவர்களைவிட, அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ஐந்து […]

அரசியல் இலங்கை

வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் கடுமையான தீர்மானம் – தமிழரசு கட்சி எச்சரிக்கை

  • November 7, 2025
  • 0 Comments

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உட்பட தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் கடுமையான தீர்மானமொன்று எடுக்கப்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சு நடத்துவதற்கு நேரம் கோரி இருந்தோம். கடந்த ஜுலை மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அதற்குரிய பதில் ஜனாதிபதி தரப்பில் இருந்து இன்னும் வழங்கப்படவில்லை […]

இலங்கை

வரவு – செலவுத் திட்டம்!! நம்பிக்கை இல்லை என்கிறார் சாணக்கியன் எம்.பி

  • November 7, 2025
  • 0 Comments

வரவு – செலவுத் திட்டம் ஊடாக நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும் என நம்பமுடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2ஆவது வரவு- செலவுத் திட்டம் இன்று முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை வழங்கியது. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம் எனவும் சூளுரைத்திருந்தது. […]

உலகம்

கனடாவில் இலங்கை குடும்பம் கொலை – குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞர்

  • November 7, 2025
  • 0 Comments

கனடா – ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் தாய், நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களின் நண்பர் உள்ளிட்ட ஆறு பேர் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஒட்டாவா நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது, தம்மீது சுமத்தப்பட்ட […]

செய்தி

சீனாவில் திருமணமான பெண்களை இலக்கு வைக்கும் விமான சேவை நிறுவனம்

  • November 7, 2025
  • 0 Comments

சீனாவில் திருமணமான பெண்களையும், அவர்களின் தாய்மாரையும் விமானப் பணிப்பெண்களாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் (Spring Airlines) அறிவித்துள்ளது. “Air Aunties” என இந்த விமான சேவைக்கு பெயரிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண்களை அவமதிக்கும் வகையில் இவ்வாறான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதனை மறுத்துள்ளது. “Air Aunties” என்ற பெயர் அவமரியாதையானது என்றும், குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்வது பெண்களின் பாரம்பரிய கடமை என்ற […]

error: Content is protected !!