இலங்கை செய்தி

சவுதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்

  • November 6, 2025
  • 0 Comments

இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெரத்(Vijitha Herath), நவம்பர் 8 முதல் 11, 2025 வரை சவுதி அரேபியாவின்(Saudi Arabia) ரியாத்திற்கு(Riyadh) அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) 26வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார். இந்த விஜயத்தின் போது, ​​அமைச்சர் விஜித ஹெரத் உலக சுற்றுலா அமைப்பின் உயர்மட்ட அமர்வுகளில் பங்கேற்பார் மற்றும் பல உறுப்பு நாடுகளின் சகாக்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று […]

இந்தியா செய்தி

மும்பையில் ரயில் மோதி 2 பேர் மரணம் – 3 பேர் காயம்

  • November 6, 2025
  • 0 Comments

தெற்கு மும்பையில் உள்ள சாண்ட்ஹர்ஸ்ட்(Sandhurst) சாலை ரயில் நிலையம் அருகே ரயில் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐந்து பேர் தண்டவாளங்களைக் கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் ஜேஜே(JJ) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர் 19 வயது ஹெல்லி மொஹ்மயா(Helly Mohmaya) என்றும், காயமடைந்தவர்களில் இருவர் 22 வயது கைஃப் சோகலே(Kaif Sokhale) மற்றும் 45 வயது […]

இந்தியா செய்தி

தெலுங்கானாவில் எறும்புகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட 25 வயது பெண்

  • November 6, 2025
  • 0 Comments

தெலுங்கானாவின் சங்காரெட்டி(Sangareddy) மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் எறும்பு பயம்(myrmecophobia) காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 2022ம் ஆண்டு திருமணமாகி மூன்று வயது மகளின் தாயான அந்தப் பெண், புடவையுடன் மின்விசிறியில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் சிறுவயதிலிருந்தே எறும்புகளுக்கு பயந்து வந்ததாகவும், ஏற்கனவே தனது சொந்த ஊரான மஞ்சேரியலில்(Manjeri) உள்ள ஒரு மருத்துவமனையில் ஆலோசனை பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், […]

உலகம் செய்தி

பிலிப்பைன்ஸில் அவசரகால நிலையை அறிவித்த ஜனாதிபதி

  • November 6, 2025
  • 0 Comments

இந்த ஆண்டு தாக்கிய மிகக் கொடிய இயற்கை பேரழிவிற்கு மத்தியில் பிலிப்பைன்ஸ்(Philippine) ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர்(Ferdinand Marcos Jr) நாட்டில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி(Kalmaegi ) புயல் காரணமாக 114 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் என்று சிவில் பாதுகாப்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், சூறாவளியின் தாக்குதல் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களை பாதித்துள்ளது மற்றும் 560,000க்கும் மேற்பட்ட மக்களை இடம்பெயர செய்துள்ளது என்று அலுவலகம் தெரிவித்துள்ளது கல்மேகி […]

இந்தியா செய்தி

மீனவர்கள் கைதுக்கு எதிராக நாகப்பட்டினத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் தமிழக வெற்றிக் கழகம்

  • November 6, 2025
  • 0 Comments

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தமிழக வெற்றிக் கழகம் நாகப்பட்டினத்தில்(Nagapattinam) நாளை(வெள்ளிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி(Puducherry) மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. கடலில் இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதற்கு நிரந்தர தீர்வைப் பெற மத்திய மற்றும் தமிழக அரசுகள் தவறிவிட்டதாக தமிழக வெற்றிக் கழகம் […]

உலகம் செய்தி

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அமெரிக்காவின் முதல் பெண் சபாநாயகர் நான்சி பெலோசி(Nancy Pelosi)

  • November 6, 2025
  • 0 Comments

அமெரிக்க அரசியலில் ஒரு உயர்ந்த நபரும், பிரதிநிதிகள் சபையின் முதல் பெண் சபாநாயகருமான நான்சி பெலோசி(Nancy Pelosi) தற்போதைய காங்கிரஸின் பதவிக்காலம் முடிந்ததும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸில் நான்சி பெலோசியின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரி 3ம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், “எனது சான் பிரான்சிஸ்கோ(San Francisco) மக்களே, முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் காங்கிரசுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டேன்” என்று நான்சி பெலோசி ஒரு காணொளி மூலம் தெரிவித்துள்ளார். […]

பொழுதுபோக்கு

‘கேஜிஎஃப்’ புகழ் ‘சாச்சா’ உயிரிழந்தார்

  • November 6, 2025
  • 0 Comments

‘கேஜிஎஃப்’ படத்தில் நடித்த கன்னட நடிகர் ஹரிஷ் ராய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 52 ஆவது வயதில் இன்று காலமானார். இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கன்னடத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தில் ‘சாச்சா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் ஹரிஷ் ராய். இந்த நிலையில், அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல் மெலிந்த நிலையில், தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது, ஒரு ஊசிக்கு மட்டும் […]

செய்தி விளையாட்டு

நான்காவது T20 போட்டியில் இந்திய அணி அதிரடி வெற்றி

  • November 6, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில், குயின்ஸ்லாந்தின்(Queensland) கராராவில்(Carrara) நடைபெற்ற நான்காவது T20 போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் சுப்மன் கில்(Shubman Gill) 46 ஓட்டங்களும் அபிஷேக் […]

இலங்கை

பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம் – நபர் ஒருவர் உயிரிழப்பு!

  • November 6, 2025
  • 0 Comments

தெல்தோட்டை – கண்டி வீதியில் ஹல்வத்த பகுதியில்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது  மரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உலகம் செய்தி

சிறை பிடித்த 28 பணயக்கைதிகளில் 21 பேரின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்!

  • November 6, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கொண்டுவரப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் கீழ் மற்றுமொரு பணயக் கைதியின் உடலை ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளனர். தான்சானிய பணயக்கைதி ஜோசுவா மொல்லலின் (Joshua Mollel) உடல் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய தடயவியல் மருத்துவ மையத்தில் தடயவியல் பரிசோதனைகள் முடிந்ததைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் 21 வயது மாணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததாக குறிப்பிடப்படுகிறது. இதேவேளை இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீன கைதிகள் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. கூடுதலாக, […]

error: Content is protected !!