ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் புகலிட விடுதிகளில் இருந்து கணிசமான தொகை வசூலிப்பு!

  • November 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் புகலிட விடுதிகளை நடத்தும் நிறுவனங்கள் ஈட்டிய அதிகப்படியான லாபத்திலிருந்து அரசாங்கம் £74 மில்லியன்களை வசூலித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தப்பின் ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உள்துறை அலுவலகம் கூறியுள்ளது. தங்குமிட வழங்குநர்கள் தங்கள் ஒப்பந்த  விதிமுறைகளின் கீழ், அரசாங்கத்திற்கு சில லாபங்களைத் திருப்பித் தருவதாக முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இதற்கமையவே மேற்படி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரும்பப் பெறப்பட்ட தொகை புகலிட விடுதிகளுக்கான ஒட்டுமொத்த செலவில் […]

பொழுதுபோக்கு

பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்… செக் வைத்தார் விஜய் சேதுபதி

  • November 7, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இதுவரை இப்படி ஒரு பிக் பாஸ் வீட்டை பார்த்ததில்லை என மக்கள் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில், போட்டியை விறுவிறுப்பாக்க வைல்டு கார்ட் போட்டியாளர்கள் நால்வரை களமிறக்கியுள்ளனர். இதற்கிடையில் யார் இந்த வாரம் வெளியேறவுள்ள தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது ரம்யா தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. வோட்டிங் அடிப்படையில் அவர் தான் கடைசியில் இருப்பதாகவும், நாளைய எபிசோட்டில் விஜய் சேதுபதி இதை அறிவிப்பார் எனவும் […]

அரசியல் இலங்கை

ஊழல் வாதிகள் தப்ப முடியாது: ஜனாதிபதி திட்டவட்டம்!

  • November 7, 2025
  • 0 Comments

அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டுமென எதிரணிகள் விடுத்த அறைகூவலுக்கு பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்தார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலடி கொடுத்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் […]

இலங்கை

வெளிநாட்டு கடனாக 1948 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன!

  • November 7, 2025
  • 0 Comments

இந்த ஆண்டு  2435 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடனாக செலுத்த வேண்டும் எனவும், அதில்   1948 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்து உரையாற்றும்போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர்,   இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் மேலும் 487 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தத் தயாராக […]

உலகம் செய்தி

குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை பரிசோதனை செய்த வடகொரியா!

  • November 7, 2025
  • 0 Comments

வடகொரியா இன்று கிழக்கு கடற்பகுதியை நோக்கி குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. வொஷிங்டன் (Washington) மற்றும் சியோலுடனான (Seoul) பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், பியோங்யாங் ( Pyongyang ) தனது சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறித்த ஏவுகணை சுமார் 700 கிலோமீட்டர் (434 மைல்) தூரம் பறந்து சென்றதாக தென்கொரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் வட கொரியாவின் ஏவுகணை தயாரிப்புகளை […]

உலகம் செய்தி

02 வருடங்களுக்கு பின் கடலுணவு ஏற்றுமதியை ஆரம்பித்த ஜப்பான்!

  • November 7, 2025
  • 0 Comments

சீனாவிற்கான கடலுணவு ஏற்றுமதிகளை ஜப்பான் மீளவும் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஹொக்கைடோவில் (Hokkaido) அறுவடை செய்யப்பட்ட 6 மெட்ரிக் டன் (6.6 டன்) ஸ்காலப்ஸ் (scallops) நேற்று முன்தினம் சீனாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 2023 இல் பெய்ஜிங் அனைத்து ஜப்பானிய கடல் உணவுகளையும் தடை செய்த பின்னர் அந்த நாட்டிற்கு அனுப்பப்படும் முதல் ஏற்றுமதியாகும். புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவுநீரை வெளியேற்றுவதற்கு சீனா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது. குறித்த தடையால் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன – ஜனாதிபதி தெரிவிப்பு

  • November 7, 2025
  • 0 Comments

இலங்கை தொடர்பில் நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ளது. அதனால்தான் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். “ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தனியார் சொத்துகள் சூறையாடப்படும் என்ற மாயை உருவாக்கப்பட்டது. ஆனால் அது போலி என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ளது. சிறந்த முதலீடுகளைப் பெறுவதற்குரிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் […]

அரசியல் இலங்கை

ஹர்ஷவை களமிறக்கும் சஜித்: நாளை நடக்கப்போவது என்ன?

  • November 7, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதம் நாளை (08) ஆரம்பமாகின்றது. எதிரணி தரப்பில் இருந்தே விவாதம் ஆரம்பித்து வைக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தியில் பொருளாதார விவகாரங்களைக் கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகிய இருவரில் ஒருவர் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ளனர். இதன்போதே வரவு- செலவுத் திட்டம் தொடர்பான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். […]

அரசியல் இலங்கை

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார்

  • November 7, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. இன்று தெரிவித்தார். நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

பொழுதுபோக்கு

கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

  • November 7, 2025
  • 0 Comments

பாலிவுட் தம்பதிகளான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்ரீனா கைஃப் – விக்கி கெளஷல் ஆகியோர், ராஜஸ்தானில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்த கத்ரீனா கைஃப், கடைசியாக விஜய் சேதுபதியுடன் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் நல்ல செய்தியை அறிவித்த கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் […]

error: Content is protected !!