உலகம் செய்தி

உலகளாவிய பயங்கரவாத தடை பட்டியலில் இருந்து சிரிய ஜனாதிபதியை நீக்கிய அமெரிக்கா

  • November 7, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான(Donald Trump) சந்திப்புக்கு முன்னதாக சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷராவை(Ahmed al-Sharaa) “பயங்கரவாத” தடைகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கியுள்ளது. அல்-கொய்தாவுடன் தொடர்புடைய முன்னாள் போராளியான அல்-ஷராவை சிறப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது என்று கருவூலத் துறை தெரிவித்துள்ளது. மேலும், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய முன்னாள் போராளியும், தற்போதய சிரியாவின் உள்துறை அமைச்சர் அனஸ் கட்டாப்பையும்(Anas Hasan Khattab) பயங்கரவாத தடைகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக கருவூலத் துறை குறிப்பிட்டுள்ளது.

உலகம் செய்தி

தென் கொரியாவில் 60 மீட்டர் உயர கோபுரம் இடிந்து விழுந்ததில் 3 பேர் மரணம்

  • November 7, 2025
  • 0 Comments

தென் கொரிய(South Korea) நகரமான உல்சானில்(Ulsan) உள்ள ஒரு அனல் மின் நிலையத்தில் 60 மீட்டர் (196 அடி) உயரமுள்ள ஒரு கோபுரத்தை இடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஐந்து பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உல்சானில் உள்ள பாய்லர்(boiler) கோபுரத்தில் ஒன்பது பேர் வேலை செய்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிலையற்ற இடிபாடுகள் காரணமாக தேடல் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உல்சானின் தீயணைப்புத் […]

இந்தியா செய்தி

ஜார்க்கண்டில் 17 வயது சிறுமியின் தலை துண்டிக்கப்பட்ட உடல் கண்டுபிடிப்பு

  • November 7, 2025
  • 0 Comments

ஜார்க்கண்டின்(Jharkhand) தும்கா(Dumka) மாவட்டத்தில் தலை துண்டிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி சரியாஹத்(Sariyahat) காவல் நிலைய எல்லைக்குள் உள்ள திகி(Dighi) கிராமத்தில் வசிப்பவர் என்று அடையாளம் கண்டுள்ளனர். இந்நிலையில், “எங்கள் முதற்கட்ட விசாரணையின்படி, இது ஒரு திட்டமிட்ட கொலையாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவருக்கு மிக நெருக்கமானவர்களால் இது செய்யப்பட்டிருக்கலாம். மேலும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது” என்று சரியாஹத் காவல் நிலைய பொறுப்பாளர் ராஜேந்திர குமார் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவரின் தந்தை நவம்பர் 4ம் […]

உலகம் செய்தி

வியட்நாமை தாக்கிய கல்மேகி புயல் – ஐவர் மரணம்

  • November 7, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸில்(Philippines) பேரழிவை ஏற்படுத்திய பிறகு, வியட்நாமை(Vietnam) தாக்கிய கல்மேகி(Kalmaegi) புயல் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காணாமல் போயுள்ளனர். மணிக்கு 149 கிமீ வேகத்தில் வீசிய கல்மேகி புயல் வியட்நாமில் பதிவான வலிமையான சூறாவளிகளில் ஒன்றாகும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 57 வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், கிட்டத்தட்ட 2,600 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது உயிரிழந்தவர்கள் டக் லாக்கில்(Duc Lak) மூன்று பேர் மற்றும் கியா லாய்(Gia Lai) மாகாணங்களில் இரண்டு […]

செய்தி விளையாட்டு

அடுத்த வருட மகளிர் உலகக் உலகக் கோப்பை தொடரில் செய்யப்பட்டுள்ள மாற்றம்

  • November 7, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் இந்தியா மற்றும் இலங்கையில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 2029ம் ஆண்டு முதல் 10 அணிகள் பங்கேற்கும் வகையில் உலகக் கோப்பை விரிவுபடுத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) அறிவித்துள்ளது. மகளிர் உலகக் கோப்பையில் தற்போது 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்தது. 2029ம் ஆண்டு முதல் […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் வாடகைதாரர்களை குறிவைக்கும் மோசடியாளர்கள்!

  • November 7, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் சமூக ஊடக தளங்களின் மூலமாக ரியல் எஸ்டேட் மோசடிகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலிவு விலையில் வீடு தேடும் வாடகைதாரர்கள் பெரும்பாலும் குறிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மோசடியாளர்கள்,  விண்ணப்பக் கட்டணம் அல்லது வைப்புத் தொகையை முதலில் வைப்பு செய்யுமாறு கோருகின்றனர். ஆர்வமுள்ள வாடகைதாரர் ஒரு மோசடி செய்பவரைக் கேள்வி கேட்டால், அவர்கள் மாற்றியமைக்கப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமங்கள் மற்றும் போலி ஏஜென்சி வலைத்தளங்களை அனுப்புவது உள்ளிட்ட அதிநவீன தந்திரோபாயங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பகத்தன்மையைக் […]

உலகம் செய்தி

இந்தோனேசியாவில் தொழுகையின்போது வெடித்த குண்டு – 50இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

  • November 7, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் பள்ளிவாசல் ஒன்றில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது 55 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவின் (Jakarta) கெலாபா காடிங் (Kelapa Gading) பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நேரத்தின்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் பெரும்பாலான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் சுமார் 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மசூதியில் பிரசங்கம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, நண்பகலில் இரண்டு பெரிய குண்டுவெடிப்பு சத்தங்கள் […]

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் – தயார் நிலையில் அரசாங்கம்!

  • November 7, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது. அதனால்தான் வரவு- செலவுத் திட்டத்தில்கூட 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தன்னால் கூற முடியாது எனவும், தேர்தலை நடத்தும் முறை தொடர்பில் நாடாளுமன்றமே சட்டம் இயற்றி தனக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும் தெரிவித்த அவர், கட்சி தலைவர்கள் இணைந்து பொருத்தமான தேர்தலை முறைமையை முன்மொழிந்தால் அதற்கமைய […]

இலங்கை செய்தி

IMFஇன் கைப்பாவையாக அரசாங்கம் – வரவு செலவு திட்டத்தை விமர்சிக்கும் சஜித்!

  • November 7, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களுக்கு நிவாரணம் வழங்காத வரவு செலவு திட்டம் எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி ஒருவரால் எழுதப்பட்டதுபோலவே அது உள்ளது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். ‘ சர்வதேச நாணய நிதியத்திடம் இந்த அரசாங்கம் சோரம்போய் உள்ளது. அதன் கைப்பாவையாகவே செயற்படுகின்றது. மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

ஐரோப்பா செய்தி

UKவில் தற்செயலாக விடுவிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி கைது!

  • November 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் சிறைச்சாலையில் இருந்து தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட பாலியல் குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அல்ஜீரிய புகலிடக் கோரிக்கையாளரான கடூர்-செரிஃப் (Kaddour-Cherif)  அக்டோபர் 29 அன்று வாண்ட்ஸ்வொர்த்  (Wandsworth ) சிறைசாலையில் இருந்து தவறுதலாக விடுதலை செய்யப்பட்டார். காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில், லண்டனின் இஸ்லிங்டனில் (Islington) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களில் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரே வாரத்தில் […]

error: Content is protected !!