இலங்கை

துப்பாக்கி தயாரிக்கும் முறை குறித்து யூடியூபில் பதிவேற்றிய இருவர் கைது!

  • June 21, 2023
  • 0 Comments

துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் வீடியோக்களை யூடியூபில் பதிவிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு துப்பாக்கிகள் மற்றும் அவற்றைத் தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களுடன் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிகளை பயன்படுத்தி சந்தேக நபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். பதுரலிய சீலதொல பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 21 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்கா

சுற்றுலா முடித்து நாடு திரும்பிய கனடிய தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • June 21, 2023
  • 0 Comments

கனடாவில் தம்பதி தம்பதியினர் விசித்திரமான அனுபவம் ஒன்றை எதிர் நோக்க நேரிட்டுள்ளது. 12 நாட்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய குறித்த தம்பதியினர் தமது காரில் சிலர் தங்கி இருந்ததனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடு திரும்பி காரை பார்த்த போது அந்த காரில் பல்வேறு பொருட்கள் காணப்பட்டதாகவும் எல்லா இடங்களிலும் குப்பைகள் போடப்பட்டிருந்ததாகவும் தம்பதியினர் தெரிவிக்கின்றனர். தமது காரை, யாரோ குடியிருப்பாக மாற்றி உள்ளனர் என்பது தெளிவானது என குறிப்பிடுகின்றனர். வாகனம் சேதமடைந்து […]

பொழுதுபோக்கு

சந்திரமுகி – 2 குறித்து அட்டகாசமான அப்டேட்…….

  • June 21, 2023
  • 0 Comments

சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. படப்பிடிப்பு […]

ஆசியா

பாகிஸ்தானுக்கு 4.8 பில்லியன் டொலர்களை வழங்கும் சீனா!

  • June 21, 2023
  • 0 Comments

பாகிஸ்தானுக்கும் – சீனாவுக்கும் இடையில் அணுமின் நிலையத்தை உருவாக்குவது குறித்து புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. 4.8 பில்லியன் டொலர் மதிப்பில் உருவாகும், இந்த திட்டம்  கையெழுத்தாகியுள்ள நிலையில், சாஷ்மா 5 திட்டத்தின் பணிகள் உடனடியாக தொடங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் மொத்த அணுசக்தி உற்பத்தி திறன் 1,400 மெகாவாட்டாக உயர்ந்தது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் ஆறாவது அணுமின் நிலையம் திறக்கப்பட்டது. மேலும் தெற்கு துறைமுக நகரமான கராச்சியில் அமைந்துள்ள அந்த […]

வட அமெரிக்கா

சிறையில் வெடித்த கலவரம்…கொத்தாக கொல்லப்பட்ட பெண்கள்!

  • June 21, 2023
  • 0 Comments

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசில் முக்கிய சிறை ஒன்றில் வெடித்த கலவரத்தில் 41 பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிலரது சடலங்கள் மொத்தமாக கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவேறு குழுக்களுக்கு இடையே வெடித்த கலவரத்திலேயே பெண்கள் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமராவில் உள்ள சிறைச்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு அதிகாரிகள் தரப்பு டசின் கணக்கான உடல்களை மீட்டுள்ளனர். சிலர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.குறைந்தது 7 பெண்கள் […]

இலங்கை

இலங்கையில் தீவிரமடையும் HIV தொற்று – வெளிவரும் அதிர்ச்சி புள்ளிவிபரம்

  • June 21, 2023
  • 0 Comments

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் எச்.ஐ.வி தொற்று 13 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்தார். இந்நிலைமை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதால் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு வரும் தடை!

  • June 21, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இளம் வயதினரை குறிவைத்து வெளியிடப்படும் துரித உணவு விளம்பரங்களை தடை செய்வதற்கான யோசனை ஒன்று மத்திய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல் பருமனை குறைப்பதே இதன் முக்கிய நோக்கம். ஆஸ்திரேலிய குழந்தைகளில் 1/4 பேர் உடல் பருமனால் அவதிப்படுவதாகவும், துரித உணவுகளை உட்கொள்வதே இதற்கு முக்கிய காரணம் என்றும் சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது. அவர்கள் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 11.8 பில்லியன் டாலர்கள் சுகாதாரப் பாதுகாப்பிற்காக செலவழிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் […]

வட அமெரிக்கா

சர்ச்சையில் சிக்கிய பைடனின் மகன் – மோசடிகள் அம்பலம்

  • June 21, 2023
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி பைடனின் மகன் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹண்டர் பைடன் வருமான வரி செலுத்தத் தவறியதாகவும், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பைடனின் இரண்டாவது மகன் ஹண்டர் பைடன் என்பவரே இவ்வாறு குற்றச்சாட்டிற்கு சிக்கியுள்ளார். 2018 அக்டோபரில் போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டார். மேலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்துவது தெரிந்திருந்தும் கோல்ட் கோப்ரா 38 சிறப்பு வாய்ந்த கைத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டார். இந்தநிலையில் அவர் மீது மேலும் ஒரு […]

பொழுதுபோக்கு

தமிழக முதலமைச்சராக தளபதி விஜய்….!!

  • June 21, 2023
  • 0 Comments

புதுச்சேரியில் விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ள பேனர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் மக்கள் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் பள்ளி படிப்புகளில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து பரிசுகள் வழகி இருந்தார் நடிகர் விஜய். நடிகர் விஜயின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவுகளை தெரிவித்துவருகின்றனர். இந்த சூழ்நிலையில் புதுச்சேரி விஜய் ரசிகர் மன்றத்தினர் புதிய பேருந்து நிலையம் மறைமலை அடிகள் […]

ஆசியா

மலேசியாவின் தாய் திட்டியதால் கொடூரமாக கொலை செய்த மகன்

  • June 21, 2023
  • 0 Comments

மலேசியாவின் Muar நகருக்கு அருகே உள்ள Taman Temiang வட்டாரத்தில் தமது 73 வயது தாயாரைக் குத்திக் கொன்ற சந்தேகத்தில் 43 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்று Muar மாவட்டக் பொலிஸ் தலைமையதிகாரி தெரிவித்துள்ளார். தாய் திட்டிய காரணத்தால் நபர் தமது தாயாரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது. தாயாருக்குத் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் குறித்த நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் கத்தியையும் […]

error: Content is protected !!