கோமாவிலிருந்து மீண்ட கணவன்.. மொத்த நன்கொடையையும் திருப்பியளிக்கும் மனைவி
சீனாவில் 3 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவன் மீண்டு வந்ததை அடுத்து, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடையை திருப்பி அளிக்க பெண் ஒருவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4,000 பேர்கள் குறித்த பெண்ணின் சமூக ஊடக விளம்பரம் பார்த்து உதவி செய்துள்ளனர். மொத்தம் 81.71 லட்சம் தொகையை தற்போது அவர் திருப்பித்தர முன்வந்துள்ளார். ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த ஜியாங் லீ கடந்த 2020ல் நடந்த கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். அவரை, […]













