ஐரோப்பா

ட்ரோன் தாக்குதல் எதிரொலி- ரஷ்யாவில் மூடப்பட்ட விமான நிலையங்கள்!

  • November 21, 2025
  • 0 Comments

ரஷ்யாவில் 08 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நேற்று இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள. உக்ரைனின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் ஐந்து பிராந்தியங்கள், கிரிமியா (Crimea) மற்றும் கருங்கடல் ( Black Sea) ஆகிய பகுதிகள் மீது 33 உக்ரேனிய ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அவை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டத்தில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற உக்ரைன் தயாராக இருப்பதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ( Volodymyr […]

பொழுதுபோக்கு

ரவி மோகனின் வழக்கு : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • November 21, 2025
  • 0 Comments

நடிகர் ரவி மோகன் தனது தனிப்பட்ட வாழ்வில் அடுத்தடுத்து பல மாற்றங்களை ஏற்படுத்தினார். அதில் ஒன்று தான் புதிதாக “ரவி மோகன் ஸ்டூடியோஸ்” ஒன்றை உருவாக்கினார். இந்த நிலையில், ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு விதித்த இடைக்கால உத்தரவை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் தயாரித்து நடிக்கும் ப்ரோ கோட் என்ற படத்தின் தலைப்பில் […]

ஐரோப்பா

ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பாடசாலைகளுக்கு பூட்டு!

  • November 21, 2025
  • 0 Comments

இங்கிலாந்தின் பல பகுதிகளில் பனியுடன் கூடிய வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்கொட்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள 100 பாடசாலைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு இங்கிலாந்து (north-east England), யார்க்ஷயர் (Yorkshire)  மற்றும் வடக்கு அயர்லாந்து (Northern Ireland) உள்ளிட்ட பகுதிகளுக்கு பனியுடன் கூடிய வானிலை தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 15-25 செ.மீ வரை பனிப் பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  மின்வெட்டுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   […]

உலகம்

பங்களாதேஷை உலுக்கிய நிலநடுக்கம் – 06 பேர் பலி!

  • November 21, 2025
  • 0 Comments

பங்களாதேஷில் இன்று வலுவான நிலநடுக்கம்  பதிவாகியுள்ள நிலையில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கமானது தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் உள்ள  கோரஷால் (Ghorashal)பகுதியில்   மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது  கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    

உலகம்

பாகிஸ்தானில் பசை தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து – 15 பேர் பலி!

  • November 21, 2025
  • 0 Comments

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு பசை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 15 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 07 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பஞ்சாப் (Punjab) மாகாணத்தில் உள்ள பைசலாபாத்தில் (Faisalabad) குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. வெடிப்புக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

அர்ச்சுனாவின் முகத்திரை கிழிப்பு!

  • November 21, 2025
  • 0 Comments

தான் கொலை அச்சுறுத்தல் விடுத்தாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டை தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் நிராகரித்தார். “ மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே நான் நாடாளுமன்றம் வந்துள்ளேன். அந்தவகையில் புத்தளம் வைத்தியசாலையை தரம் உயர்த்தி தருமாறு ஜனாதிபதியிடம் கேட்டுள்ளோம். இதனை செய்து தருவதாக அமைச்சரும், ஜனாதிபதியும் குறிப்பிட்டுள்ளனர். எனவே, பெயர் பலகை வைக்குமாறு நாம் கோரியதாக கூறும் விடயம் தவறு. உறுப்பினர் (அர்ச்சுனா) இங்கு பொய் சொல்கின்றார். எவரையும் நாம் […]

உலகம்

இந்தோனேசியாவில் ஆபத்தின் மத்தியில் தொடரும் மீட்பு பணி – பலி எண்ணிக்கை உயர்வு!

  • November 21, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜாவா (Java) பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணி தொடர்வதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அந்நாட்டின் பேரிடர் தணிப்பு நிறுவனம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடும் மழை காரணமாக சிலாகாப் நகரத்திலும் (Cilacap), பஞ்சர்நேகரா (Banjarnegara) பகுதியிலும்  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல்போயிருந்தனர். இந்நிலையில் பஞ்சர்நேகரா பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது 07 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. […]

இலங்கை

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு!

  • November 21, 2025
  • 0 Comments

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் பிரகாத் தர்மசேன (32வயது) இன்று (21) வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்கு காவலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அங்கு சென்றபோது உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. கோமரங்கடவல பிரதேச சபையில் NPP கட்சியில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

படம் ஒன்றின் டைட்டில் டீசரை வெளியிடுகின்றார் ரஜினிகாந்த்

  • November 21, 2025
  • 0 Comments

நடிகர் சசி குமார் நாயகனாக நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந். இந்த நிலையில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவாகும் இப்படத்தில், மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கின்றார். இதனைத் தொடர்ந்து, இந்தப் […]

பொழுதுபோக்கு

மம்மூட்டியின் ‘களம்காவல்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு

  • November 21, 2025
  • 0 Comments

நடிகர் மம்மூட்டி வில்லனாக நடிக்கும் ‘களம்காவல்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஜித்தின் கே ஜோஸ் இயக்கியுள்ளார். மேலும், களம்காவல் படத்தை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்மூட்டி இணைந்து தயாரித்துள்ளனர். க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான நிலையில் படத்தின் வெளியீட்டுக்கு மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 27 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப் படத்தின் […]

error: Content is protected !!