உலகம்

இந்தோனேசியாவில் ஆபத்தின் மத்தியில் தொடரும் மீட்பு பணி – பலி எண்ணிக்கை உயர்வு!

  • November 21, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜாவா (Java) பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணி தொடர்வதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அந்நாட்டின் பேரிடர் தணிப்பு நிறுவனம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடும் மழை காரணமாக சிலாகாப் நகரத்திலும் (Cilacap), பஞ்சர்நேகரா (Banjarnegara) பகுதியிலும்  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல்போயிருந்தனர். இந்நிலையில் பஞ்சர்நேகரா பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது 07 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. […]

இலங்கை

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு!

  • November 21, 2025
  • 0 Comments

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் பிரகாத் தர்மசேன (32வயது) இன்று (21) வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்கு காவலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அங்கு சென்றபோது உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. கோமரங்கடவல பிரதேச சபையில் NPP கட்சியில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

படம் ஒன்றின் டைட்டில் டீசரை வெளியிடுகின்றார் ரஜினிகாந்த்

  • November 21, 2025
  • 0 Comments

நடிகர் சசி குமார் நாயகனாக நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந். இந்த நிலையில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவாகும் இப்படத்தில், மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கின்றார். இதனைத் தொடர்ந்து, இந்தப் […]

பொழுதுபோக்கு

மம்மூட்டியின் ‘களம்காவல்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு

  • November 21, 2025
  • 0 Comments

நடிகர் மம்மூட்டி வில்லனாக நடிக்கும் ‘களம்காவல்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஜித்தின் கே ஜோஸ் இயக்கியுள்ளார். மேலும், களம்காவல் படத்தை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்மூட்டி இணைந்து தயாரித்துள்ளனர். க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான நிலையில் படத்தின் வெளியீட்டுக்கு மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 27 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப் படத்தின் […]

இந்தியா

டெல்லி செங்கோட்டை தாக்குதல் – மேலும் நால்வர் கைது!

  • November 21, 2025
  • 0 Comments

டெல்லி செங்கோட்டைக்கு அருகில்  நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக மூன்று மருத்துவர்கள் உட்பட  நான்கு பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை  நேற்று  இடம்பெற்றதாக இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் முசம்மில் ஷகீல் கனாய், டாக்டர் அதீல் அகமது ராதர், டாக்டர்  முஃப்தி இர்பான் அகமது வாகே, மற்றும்  ஷாஹீன் சயீத் ஆகிய நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். “அவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய […]

இலங்கை

என்.பி.பி. எம்பியால் எனக்கு கொலை மிரட்டல்: சபையில் கதறிய அர்ச்சுனா!

  • November 21, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, சபாநாயகரிடம் இன்று முறையிட்டார். நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பியே இவ்விடயத்தை அர்ச்சுனா சுட்டிக்காட்டி இருந்தார். “ சபாநாயகரே, புத்தளம் மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் இன்று காலை சபையில் கேள்வி எழுப்பி இருந்தேன். எனது கேள்விகள் முடிவடைந்த பின்னர் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றேன். அங்கு வைத்து புத்தளம் மாவட்ட எம்.பி. பைசல் என்னை கொலை செய்வதாக அச்சுறுத்தல் […]

இலங்கை

இஸ்ரேலில் பணிப்புரிந்து வந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழப்பு!

  • November 21, 2025
  • 0 Comments

இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதய நோய் காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குருநாகல் கல்கட்டுயாய பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை கடந்த 14 ஆம் திகதி, சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவரால் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்! பயணிக்கு நேர்ந்த கதி!

  • November 21, 2025
  • 0 Comments

துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குச் சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம் EK-434, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த ஒரு பயணி திடீரென நோய்வாய்ப்பட்டு தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் பயணி மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான A-380, நேற்று இரவு சுமார் 7.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி, பின்னர் இரவு 9.20 மணியளவில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குப் […]

உலகம்

கம்போடியாவில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து – 13 பேர் பலி!

  • November 21, 2025
  • 0 Comments

கம்போடியாவில் பயணிகள் பேருந்து ஒன்று நேற்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 13 பயணிகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சீம் ரீப்பில் (Siem Reap) இருந்து தலைநகர் புனோம் பென்னுக்கு  (Phnom Penh) பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனையில், அவர்களது உறவினர்கள் எடுத்துச் செல்லும் வரை வைக்கப்படும் […]

இலங்கை

அரகலய போராட்டம் ஜனநாயக வழிமுறைகளில் அடக்கப்பட்டது – ரணில்!

  • November 21, 2025
  • 0 Comments

இலங்கையில் ‘அரகலயா’ எதிர்ப்பு இயக்கம் ஜனநாயக வழிமுறைகள் மூலம் அடக்கப்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “நாங்கள் அனைத்தையும் செயல்படுத்தியதால், இந்த நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடிந்தது. வங்கதேசத்திலும் ஒரு பிரச்சனை இருந்தது. மக்கள் அங்கு வீதிகளில் இறங்கி போராடினர், இறுதியில் அரசாங்கம் பலப்பிரயோகம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அது நாம் எதிர்கொண்ட சூழ்நிலையைப் போல தீவிரமானது அல்ல. நேபாளத்தைப் பாருங்கள், அங்கு சமூக ஊடகங்களைக் […]

error: Content is protected !!