பொழுதுபோக்கு

சினேகன் வைத்தியசாலையில் அனுமதி..! குழந்தைகளுடன் மனைவி

  • November 21, 2025
  • 0 Comments

பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் மனைவி கன்னிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். சினேகன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், வைரல் காய்ச்சல் பரவி வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். சினேகன் மருத்துவமனையில் இருப்பதால், கன்னிகாவும் தனது இரண்டு குழந்தைகளுடன் மருத்துவமனையிலேயே இருந்து கவனித்து வருகிறார்.    

உலகம் செய்தி

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்த பிரதமர் மோடி

  • November 21, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின்(South Africa) தலைமையின் கீழ் நடைபெறும் G20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) ஜோகன்னஸ்பர்க்(Johannesburg) சென்றடைந்துள்ளார். கவுடெங்கில்(Gauteng) உள்ள வாட்டர்குலூஃப்(Waterkloof) விமானப்படை தளத்தில் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு கலாச்சார பாடல் மற்றும் நடனங்களுடன் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாட்டில் காலநிலை மாற்றம், எரிசக்தி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த உச்சிமாநாடு முக்கிய உலகளாவிய பிரச்சினைகளைப் […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – முதல் நாள் முடிவில் 19 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா

  • November 21, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று ஆரம்பமானது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி பெர்த்(Perth) மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 32.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில், ஒலி போப்(Ollie Pope) 46 ஓட்டங்களும் ஹார்ரி ப்ரூக்(Harry Brook) […]

இலங்கை

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த பெண் உயிரிழப்பு!

  • November 21, 2025
  • 0 Comments

இத்தாலியில் இருந்து இலங்கை வந்த பெண் ஒருவர் நேற்று திடீரென உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகக் கொண்டிருந்த மாலினி யோகராசா (வயது 58)  என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

02 அமைச்சகங்களின் செலவின தலைப்புகள் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

  • November 21, 2025
  • 0 Comments

கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகம் மற்றும் கைத்தொழில் மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சகத்தின் செலவினத் தலைப்புகள் இன்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தின் 6வது நாளான இன்று,  குறித்த சட்டமூலங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.  

உலகம்

கனடாவில் கரடிகள் அட்டகாசம் – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் படுகாயம்!

  • November 21, 2025
  • 0 Comments

கனடாவின் (Canada) பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் பாடசாலை குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை கிரிஸ்லி கரடி (grizzly bear ) தாக்கியுள்ளது. இதில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வான்கூவரில் (Vancouver) இருந்து வடமேற்கே 700 கிலோமீட்டர் (435 மைல்) தொலைவில் உள்ள  பெல்லா கூலாவில் (Bella Coola) நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முழுவதும் குறித்த பகுதியில் கரடியின் நடமாட்டம் இனங்காணப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் ஆயுதம் ஏந்திய […]

உலகம்

பிரேசிலில் ஐ.நா காலநிலை பேச்சுவார்த்தை அரங்கத்தில் தீவிபத்து – 13 பேர் வைத்தியசாலையில்!

  • November 21, 2025
  • 0 Comments

பிரேசிலில் ஐ.நா. காலநிலை பேச்சுவார்த்தைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட அரங்குகளில் நேற்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 13 பேர்  சுவாசப் பிரச்சினைகளுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஆறு நிமிடங்களில் தீ கட்டுப்படுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அத்துடன் தீவிபத்தை தொடர்ந்து குறித்த அரங்கம் 07 மணிநேரம் மூடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர் செயலிழப்பு அல்லது ஒரு அரங்கில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் தீயைத் தூண்டியிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் உள்ளுர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். மேலும் சம்பவம் குறித்த […]

உலகம்

நைஜீரியாவில் கிறிஸ்தவ பாடசாலையில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட மாணவர்கள்!

  • November 21, 2025
  • 0 Comments

நைஜீரியாவில் அண்மையில் 25 மாணவிகள் கடத்தப்பட்ட நிலையில் தற்போது 52 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நைஜர் மாநிலத்தின் பாபிரி (Papiri)சமூகத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் (St. Mary’s) பாடசாலையில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உள்ளுர் ஊடகங்கள் 52 குழந்தைகள் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. “காவல்துறை தந்திரோபாயப் பிரிவுகள், இராணுவக் குழுக்கள் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, கடத்தப்பட்ட மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு […]

இலங்கை

இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

  • November 21, 2025
  • 0 Comments

இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு இன்று  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒன்பது மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு, சபர்கமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல இடங்களுக்கு வானிலை ஆய்வுத்துறை மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என்று திணைக்களம் எச்சரிக்கிறது. மேலும் மின்னல் செயல்பாட்டினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு […]

பொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ பட ஆடியோ லாஞ்ச்… வெளியானது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

  • November 21, 2025
  • 0 Comments

விஜயின் சினிமா வாழ்க்கையில் இறுதி அத்தியாயம் தான் ஜனநாயகன். இதை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில், ஜனநாயகனின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றன. இப்போது ஜனநாயகன் படத்திலிருந்து மிக முக்கிய அறிவிப்பு வெளியாகி. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஆடியோ லாஞ்ச் தான் அந்த செய்தி. கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்ட பதிவில், வருகிற டிசம்பர் 27ம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் ஆடியோ வெளியீட்டு விழா […]

error: Content is protected !!