உலகம்

துபாய் விமான கண்காட்சியில் ஏற்பட்ட விபரீதம் – விமானி பலி!

  • November 21, 2025
  • 0 Comments

துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற இந்திய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அவ்விமானத்தை இயக்கிய  விமானி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் இந்திய HAL தேஜாஸ் என்ற போர் விமானமே இன்று விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளாகும் முன்பு நேரடியாக தரையை நோக்கிச் செல்வதை காணொளிகள் காட்டுகின்றன. “விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம்  இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.

இலங்கை

என்.பி.பி. ஆட்சியை விரட்ட சஜித்துக்கும் அழைப்பு!

  • November 21, 2025
  • 0 Comments

கூட்டு எதிரணியின் அடுத்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். நுகேகொடை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ 76 வருடகாலம் நாட்டை நாம் நாசமாக்கவில்லை. 1965 இல் ஜே.வி.பி. உதயமான பின்னரே நாடு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எல்லா திட்டங்களையும் அவர்கள் குழப்பினார்கள். எனவே, 76 வருடகால சாபம் நாம் அல்லர். ஜே.வி.பியினர் என்பதை புரிந்துகொள்ள […]

அரசியல் இலங்கை

ஆட்சியைக் கவிழ்ப்போம்: நாமல் சபதம்! 

  • November 21, 2025
  • 0 Comments

“துறைமுகத்தில் நங்கூரமிட்டு வைப்பதற்காக கப்பல் நிர்மாணிக்கப்படுவதில்லை. அது ஆழ்கடலில் பயணித்தாக வேண்டும். புயல் வரும், சவால்களும் வரும். கௌரவ ஜனாதிபதி அவர்களே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்பதை உங்கள் அரசாங்கத்துக்கு நினைவு படுத்துகின்றோம். அதற்காகவே மக்கள் சக்தி கட்டியெழுப்படுகின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். எனவே, நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி, அரசாங்கம் […]

ஐரோப்பா

பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் லண்டனில் அமைக்கப்படும் சீன தூதரகம்!

  • November 21, 2025
  • 0 Comments

லண்டனில் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்க பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) ஒப்புதல் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கு உள்துறை அலுவலகம் மற்றும் வெளியுறவு அலுவலகம் ஆகியவை எந்த முறையான ஆட்சேபனைகளையும் எழுப்பாது என தி டைம்ஸ் தெரிவித்துள்ளது. டிசம்பர் பத்தாம் திகதிக்குள் இதற்கான பதில்களை வழங்க வேண்டும் என பாதுகாப்பு சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் […]

இலங்கை

நுகேகொடை கூட்டத்தில் நாமல் புராணம் பாடிய சாமர எம்.பி.!

  • November 21, 2025
  • 0 Comments

அடுத்து எங்கள் ஆட்சிதான் மலரும் என்பதற்கான ஆரம்பக்கட்ட சமிக்ஞையே இந்த கூட்டமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். நுகேகொடையில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தலைவர்களை உருவாக்குவதற்குரிய கூட்டம் அல்ல நுகேகொடை பேரணி. நேரம் வரும்போது நாம் அடுத்த ஜனாதிபதியை ஒன்றிணைந்து தெரிவுசெய்வோம். இன்றைய கூட்டத்துக்குரிய ஒலிபெருக்கிகள் கழற்றப்பட்டுள்ளன . பரவாயில்லை, சிறைச்சாலையும் சென்றுவிட்டோம். எனவே, அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணிய […]

இந்தியா செய்தி

இந்தியாவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் வேடமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை!

  • November 21, 2025
  • 0 Comments

இந்தியாவின் மத்திய வங்கியின் அதிகாரிகள் போல வேடமிட்டு வந்த ஆயுதமேந்திய நபர்கள், 70 மில்லியன் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை பிற்பகல் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கிளைகளுக்கு இடையே பணத்தை பரிமாற்றுவதற்கு முனைந்தபோது SUV ரக வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கொள்ளையர்கள் வேனில் இருந்தவர்களிடம், தாங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் என்றும், இவ்வளவு பெரிய தொகையை […]

செய்தி

வடகிழக்கில் தொழில்பயிற்சி மையங்கள்: சபையில் கோரிக்கை முன்வைப்பு!

  • November 21, 2025
  • 0 Comments

“ வடக்கு, கிழக்கில் தொழில்பயிற்சி மையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ இலங்கையானது உற்பத்தி பொருளாதாரத்தில் தன்னிறைவடைய வேண்டும். அவ்வாறு அடைந்தால் ஏற்றுமதி செய்யக்கூடிய நிலை உருவாகும். இதற்கு தொழிற்பயிற்சி என்பது மிக முக்கியமாகும். எனினும், வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொழில் பயிற்சியென்பது […]

இலங்கை

அறகலயவின்போது நடந்தது என்ன? முன்னாள் சபாநாயகர் பகீர் தகவல்!

  • November 21, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறி 12 மணிநேரத்துக்கு பின்னரே அது பற்றி எனக்கு தெரியவந்தது என முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அறகலய காலகட்டம் தொடர்பில் விவரிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் மேலும் கூறியவை வருமாறு, “ பங்களாதேசில் போராட்டம் நடந்தது , ஆயிரத்து 400 பேர்வரை கொல்லப்பட்டனர். ஆனால் இலங்கையில் ஆட்சியில் இருந்த கோட்டாபய ராஜபக்ச அவ்வாறு செய்யவில்லை. அவர் ஜனநாயகத்தை ஏற்றார். […]

உலகம்

வியட்நாமில் கனமழை – 41 பேர் பலி, 09 பேர் மாயம்!

  • November 21, 2025
  • 0 Comments

வியட்நாமில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காணாமல்போயுள்ளதாக  பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டள்ளது. வெள்ளத்தில் 52,000க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன, மேலும் பல வீடுகளுக்கான  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில்  வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கனமழை தொடரும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சமீபத்திய மாதங்களில் கடுமையான வானிலை மற்றும் சூறாவளியால் வியட்நாம் கடுமையாக […]

பொழுதுபோக்கு

சிம்பு பட தயாரிப்பாளர் அதிரடியாக கைது.. அதிர்ச்சி தகவல்

  • November 21, 2025
  • 0 Comments

இன்றை நவீன காலக்கட்டத்தில் சினிமா துறை முதற்கொண்டு பல இடங்களிலும் போதைப்பொருள் தலைவிரித்தாடுகின்றது. பெரிய பெரிய தலைகளும் அவ்வப்போது கைது செய்யப்படுவது உண்டு. அப்போதுதான் “இவரா??” என்ற கேள்வி எழும். அந்த வகையில், சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில், சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஷர்புதீன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருமங்கலத்தில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக தியாகேஸ்வரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஷர்புதீனுக்கு கஞ்சா விற்றது […]

error: Content is protected !!