இலங்கை

நுகேகொடை கூட்டத்தில் நாமல் புராணம் பாடிய சாமர எம்.பி.!

அடுத்து எங்கள் ஆட்சிதான் மலரும் என்பதற்கான ஆரம்பக்கட்ட சமிக்ஞையே இந்த கூட்டமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

நுகேகொடையில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தலைவர்களை உருவாக்குவதற்குரிய கூட்டம் அல்ல நுகேகொடை பேரணி. நேரம் வரும்போது நாம் அடுத்த ஜனாதிபதியை ஒன்றிணைந்து தெரிவுசெய்வோம்.
இன்றைய கூட்டத்துக்குரிய ஒலிபெருக்கிகள் கழற்றப்பட்டுள்ளன .

பரவாயில்லை, சிறைச்சாலையும் சென்றுவிட்டோம். எனவே, அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணிய போவதில்லை.

நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது நாமலின் பட்டப்படிப்பு பற்றி பேசுவதற்கு முன்னுரிமை வழங்கும் நிலைக்கு அரசாங்கம் வந்துவிட்டது. நாமலின் பட்டப்படிப்பு பற்றி தேடுவதற்கு முன்னர் ஆட்சியாளர்கள் தமது கல்வித் தகைமைகளை வெளிப்படுத்த வேண்டும். “என்றார் சாமர எம்.பி.

அதேவேளை, தனது உரையின்போது நாமல் ராஜபக்சவை சாமர எம்.பி. புகழ்ந்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
*

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்