உலகம்

வட கரோலினாவில் துப்பாக்கிச்சூடு – நால்வர் படுகாயம்! உதவி கோரும் காவல்துறை!!

  • November 22, 2025
  • 0 Comments

வட கரோலினாவின் (North Carolina) கான்கார் (Concord) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பேர்  பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கான்கார்டில் கிறிஸ்துமஸ் மர விளக்கு ஏற்றும் நிகழ்வு நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரிகள் தப்பியோடியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி முழுவீச்சில் இடம்பெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 704-920-5027 என்ற எண்ணிற்கு தகவல் வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

பொழுதுபோக்கு

ராஜ்கமல் தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு!! மக்களுக்கு எச்சரிக்கை

  • November 22, 2025
  • 0 Comments

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் […]

உலகம் செய்தி

புலம்பெயர்ந்தோர் மீது கடுமையான அடக்குமுறையை பிரயோகிக்கும் ஈரான்!

  • November 22, 2025
  • 0 Comments

ஈரானிய அரசாங்கம் புலம்பெயர்ந்தோர் மீது கடுமையான அடக்குமுறையை தொடர்வதால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக ஆப்கானிஸ்தான் அகதிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1.5 மில்லியன் ஆப்கானிஸ்தானியர்களை ஈரான் நாடு கடத்தியுள்ளது. அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் போதுமான வளங்கள் தங்கள் கைவசம் இல்லை என தெஹ்ரான் குறிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர். தலிபான் அரசாங்கத்தின் கடுமையான பழிவாங்கல்கள் மற்றும் அடக்குமுறைக்கு அஞ்சி அகதிகள் பாகிஸ்தான், துருக்கி , ஈரானிலும் […]

உலகம்

நெருக்கடியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் – வேலையிழக்கும் ஆயிரக்கணக்கானோர்!

  • November 22, 2025
  • 0 Comments

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு (ICRC) 2026 ஆம் ஆண்டில் ஆட்குறைப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய 2,900 வேலைகள் இழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் உலகளாவிய நன்கொடையாளர்கள் நிதி குறைப்பை அறிவித்துள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ICRC தலைவர் மிர்ஜானா ஸ்போல்ஜாரிக் (Mirjana Spoljaric) அதிகரித்து வரும் ஆயுத மோதல்கள், நிதி உதவியில் குறிப்பிடத்தக்க வெட்டுக்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான […]

இலங்கை

ஐவர் புதையுண்டிருக்கலாம் என அச்சம்!

  • November 22, 2025
  • 0 Comments

கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள வியாபார நிலையமொன்றுமீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் நால்வர் காயம் அடைந்துள்ளனர். வீடொன்றுடனேயே குறித்த உணவகம் அமைந்திருந்துள்ளது. காயமடைந்தவர்கள் மானவல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின்போது குறித்த உணவகத்துக்குள் சிலர் இருந்துள்ளனர். சுமார் ஐந்து பேர்வரை சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. அவர்களை மீட்பதற்குரிய மீட்பு பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கடும் மழை பெய்துவந்த நிலையிலேயே இன்று காலை 8.45 மணியளவில் […]

உலகம் செய்தி

வெனிசுலாவின் வான்வெளியில் பறப்பது ஆபத்து – விமான நிறுனங்களை எச்சரிக்கும் அமெரிக்கா!

  • November 22, 2025
  • 0 Comments

ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுலாவை  (Venezuela) அண்டிய கடற்பகுதியில் போர் கப்பலை நிறுத்தியுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியில் விமானங்கள் பறக்கும்போது ஆபத்துக்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முதல் குறித்த பகுதியில் பயணிப்பதை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.  டெல்டா ஏர் லைன்ஸும் குறித்த பகுதியூடான பயணத்தை நிறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஃபெடரல் ஏவியேஷனின் உத்தரவுப்படி, விமான நிறுவனங்கள்  […]

பொழுதுபோக்கு

ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

  • November 22, 2025
  • 0 Comments

தனது இசையால் அனைவரையும் கட்டிப்போட்டவர்தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். காதல் ரோஜாவே முதல் ஆரம்பமாகி இன்று வரை தனது இசைப்பயணத்தை வெற்றிகரமாக தொடர்பவர்தான் இவர். இசையமைப்பாளர் ரஹ்மான் என்று கூறினாலே அந்த படம் தானாகவே வெற்றியடைந்து விடும். அந்த அளவுக்கு ரஹ்மானின் பாடல்களுக்கு வரவேற்புண்டு. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தனது வெற்றியும் புகழும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி பகிர்ந்துள்ளார். குறிப்பாக, அவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததன் பின்னணி காரணம் குறித்து […]

செய்தி விளையாட்டு

“தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும்” – கிரிகெட் வீரர் சாமிக மீது வழக்கு தாக்கல்!

  • November 22, 2025
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்ன மீது விமானப் பணிப்பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். குறித்த வழக்கில் அவர் தன்னை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் தனது குழந்தைக்கு  பராமரிப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். கொழும்பு கூடுதல் நீதிபதி கசுன் காஞ்சனா திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு வரும் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் முன்வைத்துள்ள முறைப்பாட்டில், திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன்,  கிரிக்கெட் வீரருடன் உறவைப் […]

இலங்கை

(New update)கண்டி – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு : ஒருவர் பலி!

  • November 22, 2025
  • 0 Comments

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் அமைந்திருந்த சில வர்த்தக நிலையங்கள்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். மண்சரிவில் சிக்கியவர்களில் மூவர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் மேலும் ஐவர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. கடும் மழை காரணமாக மண்சரிவு இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கண்டி – கொழும்பு பிரதான வீதி மாவனல்லை பகுதியில் மூடப்பட்டுள்ளது. மாற்று வீதியை பயன்படுத்துமாறு […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு – பலர் புதையுண்டிருக்கலாம் என அச்சம்

  • November 22, 2025
  • 0 Comments

கண்டி – கொழும்பு வீதியில் கண்டி, பஹால கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. கடும் மழை காரணமாக மண்சரிவு இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்றின்மீது மண்மேடு விழுந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. ஒரு வழி போக்குவரத்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வியாபார நிலையத்தில் இருந்த சிலர் மண்மேட்டில் சிக்குண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மீட்பு பணி தற்போது இடம்பெற்றுவருகின்றது. வியாபார நிலையத்தில் எத்தனை […]

error: Content is protected !!