இலங்கை

21 மாவட்டங்களில் உச்சம் தொடும் வெப்பம்!

  • April 17, 2026
  • 0 Comments

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ( 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவுறுத்தலின்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திலும் இந்த வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பச் சுட்டெண் (Heat Index) அதிகரிப்பதன் காரணமாக, நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு அதிக உடல் […]

உலகம் செய்தி

போர்நிறுத்தத்தை வரவேற்ற லெபனான்  – சர்வதேச முயற்சிகளுக்கு பாராட்டு

  • April 16, 2026
  • 0 Comments

இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் வரவேற்றுள்ளார். போர் தொடங்கியதிலிருந்தே இந்த ஒப்பந்தத்தை லெபனான் தொடர்ந்து கோரி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த போர் நிறுத்தம் மோதலால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்ப உதவும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார். போர் நிறுத்தத்தை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச முயற்சிகளையும் நவாஃப் சலாம் பாராட்டியுள்ளார்.

ஐரோப்பா செய்தி

இஸ்ரேல்–லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் – ஐரோப்பா வரவேற்பு

  • April 16, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த இஸ்ரேல் – லெபனான் இடையேயான 10 நாள் போர் நிறுத்தத்தை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வரவேற்றுள்ளார். இந்த மோதல் ஏற்கனவே எண்ணற்ற உயிர்களைப் பலிகொண்டுள்ள நிலையில், இந்த போர் நிறுத்தம் ஒரு நிம்மதி என அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இது தற்காலிக அமைதி மட்டுமல்லாமல், நிரந்தர அமைதிக்கான பாதையாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேவேளை, லெபனானின் இறையாண்மைக்கு முழுமையான […]

உலகம் செய்தி

லெபனான்–இஸ்ரேல் போர் நிறுத்தம் வெற்றியடைந்ததாக ட்ரம்ப் அறிவிப்பு

  • April 16, 2026
  • 0 Comments

லெபனான் மற்றும் இஸ்ரேல் 10 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில்  பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜோசப் அவுன் ஆகியோரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, ட்ரம்ப் இதனை ஒரு முக்கிய வெற்றி என அறிவித்தார். தன்னை சமாதானத் தூதராக கருதி பெருமிதம் அடையும்  ட்ரம்ப்  இஸ்ரேல்–லெபனான் போர் நிறுத்தம் தான் […]

இலங்கை செய்தி

நீராடச் சென்ற இருவர் பலி – மேலும் அறுவர் மாயம்

  • April 16, 2026
  • 0 Comments

தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 15 பேரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நிக்கவரட்டிய, குரட்டியகஹமுல பகுதியில் இந்த சம்பவம் இன்று  (16) மாலை இடம் பெற்றுள்ளது நீரில் மூழ்கியவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அறுவர்  காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காணாமற்போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் செய்தி

ட்ரம்புக்கு ‘ஐஸ்’ வைத்த லெபனான் ஜனாதிபதி!

  • April 16, 2026
  • 0 Comments

லெபனானில் நிலவும் பதற்றத்தைத் தணித்து போர்நிறுத்தத்தை ஏற்படுத்த டிரம்ப் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு லெபனான் ஜனாதிபதி Joseph Aoun நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போதே அவர் இவ்வாறு நன்றி கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, லெபனானில் நிலையான அமைதியை நிலைநாட்ட விரும்புவதாக இதன்போது ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த லெபனான் ஜனாதிபதி, இதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார். பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் […]

ஐரோப்பா செய்தி

ஐரோப்பாவில் ஜெட் எரிபொருள் நெருக்கடி – கோடை விமானப் பயணங்கள் பாதிக்கப்படுமா?

  • April 16, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் ஜெட் எரிபொருள் கையிருப்பு வெறும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே இருப்பதாக சர்வதேச எரிசக்தி துறை வட்டாரங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், கோடை விடுமுறைக்கான விமானப் பயணங்களில் இரத்துகள் மற்றும் கட்டண உயர்வுகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாரிஸில் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் ஃபாத்திஹ் பிரோல், மத்திய கிழக்கு மோதல்களின் காரணமாக ஜெட் எரிபொருள் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதேபோன்ற கவலைகளை முன்பே விமானத் துறையும் வெளிப்படுத்தியிருந்தது. […]

இந்தியா

தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு!

  • April 16, 2026
  • 0 Comments

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைமூலம் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 இல் இருந்து 59 ஆக அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். தொகுதி மறுவரையறை சட்டமூலம் 2026-ஐ மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் முன்வைத்தார். இச்சட்டமூலத்துக்கு தமிழக அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. தமிழக கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் மேற்படி சட்டமூலம்மீதான விவாதத்தில் உரையாற்றிய அமித் ஷா, “ஐந்து தென்மாநிலங்களில் தற்போது 129 மக்களவைத் […]

இலங்கை செய்தி

அன்னை பூபதிக்கு தமிழர் தலைநகரில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!

  • April 16, 2026
  • 0 Comments

அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16) காலை திருகோணமலை சிவன் கோவிலடியை சென்றடைந்தது. இதன்போது பொதுமக்கள் அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, தீபச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருகோணமலையின் முக்கிய பகுதிகளிலும் அவருடைய உருவப்படத்திற்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து […]

உலகம் செய்தி

ஈரானின் மிக முக்கிய இலக்குகளை தாக்குவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை!

  • April 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின்போது ஈரான் இணக்கத்துக்குவர தவறும் பட்சத்தில் அந்நாடு மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் israel katz எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் நடவடிக்கையின்போது தாக்காத மிக முக்கியமான இலக்குகளை தாக்குவதற்கு இஸ்ரேல் தயாராகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எதிர்காலம் தற்போது அதன் கைகளிலேயே உள்ளது எனவும், தவறான முடிவை எடுத்தால் தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் பேரழிவை சந்திக்க நேரிடும் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் israel katz எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!