உலகம் செய்தி

புதிய திட்டத்தை முன்வைத்துள்ள ஈரான்: ட்ரம்ப் தகவல்!

  • April 25, 2026
  • 0 Comments

ஈரான் புதியதொரு திட்டத்தை முன்வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், அதன் முழுமையான விபரங்கள் இன்னும் தனக்குத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். அமெரிக்க அரசு தற்போது ஈரானின் முக்கிய அதிகாரிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் ஈரான் ஆர்வம் காட்டி வருவதாக ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை செய்தி

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை குறித்து ஆராய்வு!

  • April 25, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் தொடர்பில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விரிவாகத் தெரியப்படுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (24.04.2026) வெள்ளிக்கிழமை இரவு ஆளுநருக்கும், பிரதி அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புத் தேவைப்பாடுகள் இன்னமும் அதிகமாகக் காணப்படுவதை ஆளுநர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, வன்னிப் பிரதேசத்தில் உள்ள கிராமங்களை இணைக்கும் வீதிகள் […]

ஐரோப்பா செய்தி

போர் பதற்றம் – அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து போலந்து பிரதமர் கேள்வி!

  • April 25, 2026
  • 0 Comments

சமீபகாலமாக ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து போலந்து பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk), நேட்டோ ஒப்பந்தங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி அமெரிக்கா விசுவாசமாக இருக்கத் தயாராக உள்ளதா என்பதே ஐரோப்பாவின் மிகப்பெரிய, மிக முக்கியமான கேள்வி” என்று குறிப்பிட்டுள்ளார். நேட்டோ மீதான தனது நிலைப்பாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுவதற்கும் அவர் கண்டனம் […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் ராணுவ தளபதி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

  • April 25, 2026
  • 0 Comments

  ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் Field Marshal Asim Munir ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலைவரங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது. அதேவேளை, பாகிஸ்தான் பயணத்தை தொடர்ந்து, தனது அடுத்தகட்டமாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கருத்து & பகுப்பாய்வு

05 வயதில் கர்ப்பம் : உலகை திரும்பி பார்க்க வைத்த சிறுமி!

  • April 25, 2026
  • 0 Comments

லீனா மெடினா (Lina Medina) 1939-ஆம் ஆண்டில் பெரும்பாலான மீடியாக்களில் பேசப்பட்ட ஒரு பெயர். காரணம் 05 வயதில் சிறுமியொருவர் ஆண்குழந்தையொன்றுக்கு தாயானார் என்ற நம்பமுடியாத செய்திதான். மருத்துவ உலகில் மிகவும் அரிதாக நிகழ்ந்த ஒரு பிரசவம் இதுதான். சற்றும் நம்பமுடியாத இந்த கதை வாசகர்களை கற்பனையின் உச்சத்திற்கு கொண்டு செல்லும். லீனா, பெருவின் மிக ஏழ்மையான பகுதியான மலைப்பாங்கான இடத்தில் சுமார் 7,400 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார். ஆரம்பத்தில், […]

இலங்கை செய்தி

NPP அரசுக்கு தலையிடியாக மாறியுள்ள’ இணைய மோசடி’!

  • April 25, 2026
  • 0 Comments

நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவிய இணையக் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்ட சம்பவம் குறித்து சர்வதேச நாணய நிதியம் IMF அவதானம் செலுத்தியுள்ளது. ஆங்கில இணைய ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. பொருளாதார மறுசீரமைப்புத் துறையின் கணினி அமைப்புகளுக்கு அனுமதியின்றி அணுகப்பட்டதை உறுதி செய்து இலங்கை நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த முக்கிய நிகழ்வை நாங்கள் கவனத்தில் கொண்டு, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று சர்வதேச […]

உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் நடக்கப்போவது என்ன? நேரடி சந்திப்பு நடக்குமா?

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் தூதுக்குழுக்களுக்கிடையில் இஸ்லாமாபாத்தில் நேரடி பேச்சு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பினரும் அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தனித்தனியே பேச்சு நடத்தவுள்ளனர். இப்பேச்சு வெற்றிபெற்றால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இரு நாடுகளும் நேரடிப் பேச்சில் ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பிராந்திய மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதே இந்த இராஜதந்திர நகர்வுகளின் முக்கிய நோக்கமாகும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்க தூதுக்குழுக்கள் இஸ்லாமாபாத் வந்துள்ளன என தெரிகின்றது.

விளையாட்டு

ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை!

  • April 25, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 36 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. இந்த சீசனில் […]

விளையாட்டு

RCB அணி வெற்றிநடை!

  • April 25, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியுள்ளது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீசியது. 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்றது. புpன்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது. ஜேக்கப் பெத்தல் 14 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதன் பின்னர் […]

உலகம் செய்தி

கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள தயாராகிறது British Airways!

  • April 25, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால், உலகளவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தாய் அமைப்பான International Airlines Group (IAG) விமான பயணச்சீட்டுகளின் விலையை அதிகரிக்கபோவதாக அறிவித்துள்ளது. பொதுவாக விமான நிறுவனங்கள் எரிபொருளை முன்னதாகவே நிலையான விலைக்கு வாங்கும் முன்பதிவு பாதுகாப்பு முறையைப் பின்பற்றுகின்றன. இருப்பினும், தற்போதைய மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளிலிருந்து தப்ப முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, கூடுதல் எரிபொருள் செலவினங்களை […]

error: Content is protected !!