பணி நிமித்தம் இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்பும் செயற்பாடு நிறுத்தம்!
இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இன்று (16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரதி அமைச்சர் தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர சுட்டிக்காட்டினார். மேலும் பேசிய வெளியுறவு மற்றும் வெளிநாட்டு […]













