ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: ஆஸ்திரேலியாவுக்கு மகிழ்ச்சியான செய்தி!

  • April 24, 2026
  • 0 Comments

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான $276 மில்லியன் மதிப்பிலான முதல் முக்கிய ஒப்பந்தத்தை பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்திற்கான முழு நிதியையும் ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்குகிறது, மேலும் இதற்கான வடிவமைப்புப் பணிகளை ஜெனரல் டைனமிக்ஸ் எலக்ட்ரிக் போட் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்கக் கடற்படையின் உற்பத்தி வேகம் மந்தமாக இருந்தாலும், இந்த ஒப்பந்தம் திட்டத்தின் முன்னேற்றத்தைக் காட்டுவதாக அதிகாரிகள் கருதுகின்றனர். […]

உலகம் செய்தி

இஸ்ரேல், லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தம் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு!

  • April 24, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட முக்கிய ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த காலக்கெடு நீட்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நிலவி வரும் மோதல்களைத் தவிர்த்து, அமைதியை நிலைநாட்ட […]

உலகம்

நட்புறவை வலுப்படுத்தும் வடகொரியா – ரஷ்யா!

  • April 23, 2026
  • 0 Comments

வட கொரியாவும் ரஷ்யாவும் தங்களின் வளர்ந்து வரும் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் புதிய பாலத்தை கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. துமென் ஆற்றின் குறுக்கே  இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்களின் நடமாட்டம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் நெடுஞ்சாலை வலையமைப்புடன் ஒருங்கிணைக்கப்படவுள்ள 850 மீட்டர் (2,789 அடி) நீளம் […]

செய்தி தமிழ்நாடு

வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 85.06 சதவீத வாக்குகள் பதிவு

  • April 23, 2026
  • 0 Comments

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 85.06 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. இதேவேளை சுதந்திரத்திற்கு பின் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது எனவும், மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் சல்யூட் எனவும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் இரவு 8 […]

உலகம் செய்தி

04ஆவது அணுசக்தி கப்பலை உருவாக்குகிறதா சீனா – காணொளியால் உருவான சந்தேகம்!

  • April 23, 2026
  • 0 Comments

சீனா தற்போது வெளியிட்டுள்ள காணொளி ஒன்று இணையத்தளத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மக்கள் விடுதலை இராணுவ (PLA) கடற்படையின் 77வது ஆண்டு விழாவிற்கு முந்தைய நாள் வெளியிடப்பட்ட அந்தக் காணொளியில், விமானந் தாங்கி கப்பலில் பணியாற்றுவது போல் வடிவமைக்கப்பட்ட சில இராணுவ வீரர்கள்  இடம்பெற்றுள்ளனர். “ஹே ஜியான்” (He Jian) என்ற 19 வயது இளைஞர் அந்தக் குழுவில் இணைவது காட்டுப்பட்டுள்ளது. இந்த காணொளி சீனா தனது நான்காவது அணுசக்தி விமானம் தாங்கி […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் பதற்றம் அதிகரிப்பு: இஸ்ரேலிய இராணுவத்தின் புதிய எச்சரிக்கை

  • April 23, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள்  நடைபெற உள்ள நிலையில், லெபனானின் தெற்குப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய விமானப்படை X தளத்தில் வெளியிட்ட தகவலின்படி, தெற்கு லெபனானின் செஜௌட் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா ஏவுதளத்தில் செயல்பட்டு வந்த ஒருவரை ஒழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தொடர்ச்சியான பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அந்தப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தொடரும் நிலையில், லெபனானின் தெற்கு எல்லை கிராம மக்களுக்கு இஸ்ரேலிய […]

ஐரோப்பா

லெபனான் இராணுவத்திற்கு நிதியுதவி வழங்க தயாராகும் மக்ரோன்!

  • April 23, 2026
  • 0 Comments

லெபனான் இராணுவத்திற்கு ஆதரவளிப்பது மற்றும் அந்நாட்டின் சிதைந்த தெற்குப் பகுதியை புனரமைக்க பிரான்ஸ்  ஜனாதிபதி மக்ரோன் முன்மொழிந்துள்ளார். இதற்காக மாநாட்டை நடத்தத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். தனது சைப்ரஸ் நாட்டு சகா நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு மக்ரோன் தொடர்புடைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கூடுதல் ஐரோப்பிய நிதியை விடுவிப்பதை  இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டிருக்கும் என்றும், லெபனானுடன் ஒரு ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மை ஒப்பந்தம் செய்துகொள்ளும் யோசனையைத் தானும் கிறிஸ்டோடோலிடிஸும் ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை செய்தி

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நாளை நள்ளிரவுடன் நிறைவு

  • April 23, 2026
  • 0 Comments

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை, ஏப்ரல் 24 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் இணையதளம் ஊடாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். நாளை நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையதள அணுகல் முடக்கப்படும் என்பதுடன் எக்காரணம் கொண்டும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இறுதி நேர தொழில்நுட்ப நெரிசல்களைத் தவிர்க்கும் பொருட்டு, பரீட்சார்த்திகள் முன்னதாகவே விண்ணப்பங்களைச் […]

உலகம் செய்தி

லெபனானில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் : இஸ்ரேலுக்கு எதிராக ஜனாதிபதி கண்டனம்

  • April 23, 2026
  • 0 Comments

லெபனானில் பத்திரிகையாளர்களை இஸ்ரேல்  தொடர்ச்சியாகக் குறிவைப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற கொலைகளைத் தடுக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு, நேற்று இஸ்ரேலிய தாக்குதலில் பத்திரிகையாளர் அமல் கலீல் உயிரிழந்ததையடுத்து எழுந்துள்ளது. அவரது மரணத்தை நினைவுகூரும் வகையில், இன்று காலை பெய்ரூட்டில் உள்ள தியாகிகள் சதுக்கத்தில் பத்திரிகையாளர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். அவர் பணியாற்றிய “அல் அக்பர்” நாளிதழின் முதல் பக்கத்தில், கையில் ஒலிவாங்கியுடன் புன்னகைக்கும் […]

உலகம் செய்தி

காசாவில் இன அழிப்பு: இஸ்ரேல் தாக்குதல்களில் 72,562 பேர் பலி!

  • April 23, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,562 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 172,320 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஒக்டோர் 7 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த இன அழிப்பு இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையில் கடந்த வருடம் ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. எனினும், போர்நிறுத்த விதிமுறைகளைமீறி இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது. போர் […]

error: Content is protected !!