இலங்கை செய்தி

GSF படைப்பிரிவு குறித்து ஐ.நாவில் இலங்கை ஆராய்வு!

  • April 24, 2026
  • 0 Comments

ஹைட்டிக்கு haiti முன்மொழியப்பட்ட கும்பல் ஒடுக்குதல் படையுடன் Gang Suppression Force (GSF) இணைந்து சேவையாற்றுவது தொடர்பில் இலங்கை ஆராய்ந்துவருகின்றது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தொடர்பான பேச்சுவார்த்தை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினருக்கும் , ஐ.நா மூத்த அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர், நடவடிக்கை ஒத்துழைப்புக்கான பிரதிப் […]

விளையாட்டு

RCB, குஜராத் அணிகள் இன்று மோதல்!

  • April 24, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறவுள்ள 34ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru , Gujarat Titans ஆகிய அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். பெங்களூரு அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், சென்னை ஆகிய அணிகளை வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்றது. அதன் பிறகு மும்பை, லக்னோவை ஆகிய அணிகளை மண்டியிட வைத்தது. எனினும், முந்தைய ஆட்டத்தில் டெல்லியிடம் பணிந்தது. குஜராத் அணி முதல் […]

விளையாட்டு

அபார வெற்றியுடன் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது சென்னை!

  • April 24, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், Mumbai Indians அணியை 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி Chennai Super Kings வெற்றி பெற்றது. வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற Mumbai அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. Chennai அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாகத் தொடங்கி 22 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர் களம் புகுந்த சஞ்சு சாம்சன், மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 54 பந்துகளில் […]

உலகம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!

  • April 24, 2026
  • 0 Comments

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 1.22 சதவீதம் அதிகரித்து, அதன் புதிய விலை 106.355 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. மேலும், சந்தைத் தரவுகளின்படி, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 1.17 சதவீதம் அதிகரித்து, 96.97 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், ஒரு பேரல் மெர்பன் கச்சா எண்ணெயின் விலை 2.74 சதவீதம் அதிகரித்து 105.95 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

இலங்கை

மருதானை நோக்கி பயணித்த ரயில் தடம் புரண்டது!

  • April 24, 2026
  • 0 Comments

பெலியத்தவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிகா ரயில் இன்று காலை (24) தடம் புரண்டுள்ளது. வடுவ ரயில் நிலையம் அருகே குறித்த ரயில் சேவை தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கடலோர ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: ஆஸ்திரேலியாவுக்கு மகிழ்ச்சியான செய்தி!

  • April 24, 2026
  • 0 Comments

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான $276 மில்லியன் மதிப்பிலான முதல் முக்கிய ஒப்பந்தத்தை பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்திற்கான முழு நிதியையும் ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்குகிறது, மேலும் இதற்கான வடிவமைப்புப் பணிகளை ஜெனரல் டைனமிக்ஸ் எலக்ட்ரிக் போட் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்கக் கடற்படையின் உற்பத்தி வேகம் மந்தமாக இருந்தாலும், இந்த ஒப்பந்தம் திட்டத்தின் முன்னேற்றத்தைக் காட்டுவதாக அதிகாரிகள் கருதுகின்றனர். […]

உலகம் செய்தி

இஸ்ரேல், லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தம் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு!

  • April 24, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட முக்கிய ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த காலக்கெடு நீட்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நிலவி வரும் மோதல்களைத் தவிர்த்து, அமைதியை நிலைநாட்ட […]

உலகம்

நட்புறவை வலுப்படுத்தும் வடகொரியா – ரஷ்யா!

  • April 23, 2026
  • 0 Comments

வட கொரியாவும் ரஷ்யாவும் தங்களின் வளர்ந்து வரும் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் புதிய பாலத்தை கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. துமென் ஆற்றின் குறுக்கே  இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்களின் நடமாட்டம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் நெடுஞ்சாலை வலையமைப்புடன் ஒருங்கிணைக்கப்படவுள்ள 850 மீட்டர் (2,789 அடி) நீளம் […]

செய்தி தமிழ்நாடு

வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 85.06 சதவீத வாக்குகள் பதிவு

  • April 23, 2026
  • 0 Comments

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 85.06 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. இதேவேளை சுதந்திரத்திற்கு பின் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது எனவும், மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் சல்யூட் எனவும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் இரவு 8 […]

உலகம் செய்தி

04ஆவது அணுசக்தி கப்பலை உருவாக்குகிறதா சீனா – காணொளியால் உருவான சந்தேகம்!

  • April 23, 2026
  • 0 Comments

சீனா தற்போது வெளியிட்டுள்ள காணொளி ஒன்று இணையத்தளத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மக்கள் விடுதலை இராணுவ (PLA) கடற்படையின் 77வது ஆண்டு விழாவிற்கு முந்தைய நாள் வெளியிடப்பட்ட அந்தக் காணொளியில், விமானந் தாங்கி கப்பலில் பணியாற்றுவது போல் வடிவமைக்கப்பட்ட சில இராணுவ வீரர்கள்  இடம்பெற்றுள்ளனர். “ஹே ஜியான்” (He Jian) என்ற 19 வயது இளைஞர் அந்தக் குழுவில் இணைவது காட்டுப்பட்டுள்ளது. இந்த காணொளி சீனா தனது நான்காவது அணுசக்தி விமானம் தாங்கி […]

error: Content is protected !!