பொழுதுபோக்கு

விஜய் டிவியின் ஆலமரமே “கோபிநாத்”தானே.. அவரும் போய்ட்டாரா???

விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு எக்கச்சக்க வரவேற்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் டிடி நீண்ட காலமாக விஜய் டிவியில் இருந்த நிலையில், அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாத சூழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக டிடி விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவதில்லை.

அதேபோல் தான் சமீபத்தில் பாவனாவும் விஜய் டிவியிலிருந்து விலகியதற்கான காரணத்தை கூறியிருந்தார். அதாவது பெண்களுக்கு அங்கு அதிக முக்கியத்துவம் இல்லை அதனால் வெளியேறி விட்டதாக கூறியிருந்தார்.

அதேபோல் கோபிநாத் விஜய் டிவியின் ஆலமரமாக செயல்பட்டு வந்தார். அவரது பலமே நீயா நானா நிகழ்ச்சி என்று சொல்லலாம். இந்நிலையில் விஜய் டிவியில் இருந்து கோபிநாத் விலகுவதாக ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

அதாவது வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் மேட்ச் தொடங்க இருக்கிறது. இதை விஜய் டிவி கோபிநாத் தொகுத்து வழங்க இருக்கிறாராம். ஏற்கனவே விஜய் டிவியில் பணியாற்றிய பாவனாவும் முழு நேரமாக கிரிக்கெட் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

அதேபோல் கிரிக்கெட் வர்ணனையாளராக ஆர்ஜே பாலாஜி, படவா கோபி போன்ற பிரபலங்களும் பணியாற்றி வருகிறார்கள். சினிமா மற்றும் அரசியலில் மிகப்பெரிய பிரபலங்களை பேட்டி எடுத்து வந்த கோபிநாத் கிரிக்கெட்டையும் மிச்சம் வைக்கவில்லை.

ஆனாலும் விஜய் டிவியிலிருந்து விலகுவதாக வெளிவந்த செய்தி உண்மை இல்லை என்று கோபிநாத் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. ஏனென்றால் தொடர்ந்து நீயா நானா நிகழ்ச்சியையும் இவர்தான் தொகுத்து வழங்க இருக்கிறாராம்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்