இந்தியா செய்தி

சிறுமிக்கு எமனாக ஆக்லைனில் வந்த கேக்

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமிக்கு உணவு விஷம் ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த மான்வி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளுக்கு கேக் வாங்கியுள்ளார்.

மான்வி குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடினார். இரவு 10 மணிக்குள் கேக்கை சாப்பிட்ட அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மான்வியின்  சகோதரர்கள் வாந்தி எடுத்தனர். மான்வி தனது தொண்டை வறண்டு விட்டது என்றும் அவ்வப்போது தண்ணீர் கேட்டாள். சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். மறுநாள் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் உயிரிழந்தார். ஆன்லைனில் ஆர்டர் செய்த சாக்லேட் கேக்கில் விஷம் கலந்திருந்ததாகவும், அதுவே உயிரிழப்புக்குக் காரணம் என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

குழந்தையின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். பேக்கரி உரிமையாளர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளதாகவும், கேக்கின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

ஆய்வு அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி