விளையாட்டு

முத்தமிட்ட சர்ச்சையில் சிக்கிய ஸ்பானிஷ் முன்னாள் தலைவருக்கு 3 ஆண்டுகள் தடை

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றது.

இதில் ஸ்பெயின் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது. லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.

இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். எனினும், கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி வீராங்கனைகள் தெரிவித்து இருந்தனர்.

இதை தொடர்ந்து, ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் பதவியை லூயிஸ் ரூபியேல்ஸ் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், லூயிஸ் ரூபியேல்ஸ்-க்கு ஃபிஃபா மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்து இருக்கிறது. இது தொடர்பான விசாரணை நடத்திய குழு தீர்ப்பு குறித்த முழு விவரங்களை வழங்கவில்லை.

வீராங்கனைகளுக்கு முத்தமிட்ட விவகாரத்தில் லூயிஸ் மீது ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ