ஈரானின் 30 இற்கும் மேற்பட்ட தனி நபர்கள், நிறுவனங்கள் மீது பொருளாதார தடை!
ஈரானின் 30 இற்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்க கரூவூலத்துறை தடை விதித்துள்ளது.
கருவூலத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம், நேற்று தொடர்புடைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத பெட்ரோலிய விற்பனை, பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆயுத உற்பத்தியை செயல்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
முன்னதாக தெஹ்ரான் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால் பாரிய விளைவுகள் ஏற்படும் என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பொருளாதார தடைகளை விதித்து மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். இந்த நடவடிக்கையானது ஏற்கனவே பொருளாதார அழுத்தத்தில் உள்ள ஈரானுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.





