இலங்கை செய்தி

தனுஷ்க மூன்று குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பு

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுக்களில் 3 குற்றச்சாட்டுக்கள் நீக்கப்படுவதாக அரசாங்க சட்டத்தரணி டவுனிங் சென்டர் நீதிமன்றில் இன்று (18) அறிவித்தார்.

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகளில் ஒன்றை முன்வைத்து எஞ்சிய மூன்று குற்றச்சாட்டுகள் மீளப் பெறப்படும் என இன்று (18) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரசாங்க சட்டத்தரணி நீதவானிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிளாரி ஃபர்னான், மூன்று குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதன்படி, தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அரசாங்க சட்டத்தரணி சுமத்த தீர்மானித்த குற்றச்சாட்டானது பெண்ணின் அனுமதியின்றி உடலுறவு கொண்ட குற்றச்சாட்டாகும் என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கு ஜூலை 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை