உலகம் செய்தி

முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பால் சீனாவில் நெருக்கடி

சீனாவின் மக்கள்தொகைப் பரிணாம வளர்ச்சியுடன், ஓய்வூதிய முறை புதுப்பிக்கப்படாததால், அந்நாட்டு முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2022 இல் 280.04 மில்லியனாக இருந்த 60 வயதுக்கு மேற்பட்ட சீனாவின் மக்கள் தொகை 2023 இல் 296.97 மில்லியனாக வளர்ந்துள்ளது.

அதன்படி, சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 21.1% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

வயதான சனத்தொகை அதிகரிப்புடன், ஓய்வூதியத் திட்டத்தில் உரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததால், எதிர்காலத்தில் அதே முறையைப் பேணுவது கூட நெருக்கடியாக இருக்கும் என வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் ஓய்வு பெற்றவர்களுக்கு தேவையான விரிவான பாதுகாப்பு மற்றும் பலன்களில் ஏற்கனவே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

சீன அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் முதியோர்களின் தேவைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு இல்லாமை சீனாவின் ஓய்வூதிய அமைப்பில் ஒரு முக்கிய பலவீனமாகத் தோன்றுவதாகவும் அந்நாட்டின் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் அரசாங்கம் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், முதியோர்களின் நலனை புறக்கணித்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி