ஆப்பிரிக்கா

வாழ்க்கை செலவு நெருக்கடி : நைஜீரியாவில் வெடித்த போராட்டம்!

நைஜீரியாவில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில் பெருமளவான இளைஞர்கள் தெருக்களில் குவிந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டகாரர்களை கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

அபுஜாவில் உள்ள  ஒரு மைதானத்தில் போராட்டத்தை கட்டுப்படுத்த நீதிமன்றம் உத்தரவு வழங்கியதாக அறிய முடிகிறது.

நைஜீரிய பொலிஸ் அதிகாரிகள் ஜனாதிபதி வில்லாவிலிருந்து சில கிலோமீட்டர்கள் (மைல்கள்) திரண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதைக் காண முடிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோதலால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் பௌச்சி மற்றும் போர்னோ மாநிலங்களில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பாதுகாப்புப் படையினர் யாரையும் கைது செய்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு