இலங்கை

இலங்கையில் போதைப்பொருளுடன் சிக்கிய சிறைச்சாலை அதிகாரி!

ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலில் சிறைச்சாலை அவசர பதில் தந்திரோபாயப் படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரியை பரிசோதித்த போது, ​​அவரிடம் ஐஸ் என சந்தேகிக்கப்படும் சில போதைப்பொருள் பொதிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றை அந்த அதிகாரி தனது பணி காலணியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாக சிறைச்சாலை ஊடகப் ​பேச்சாளரும் ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர் சுமார் 20 வருடங்கள் சிறைச்சாலையில் பணியாற்றிய அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொரளை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்