இருளில் மூழ்கியது கியூபா
கியூபாவில் நேற்று நாடு தழுவிய ரீதியில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முற்றுகை காரணமாக கியூபா எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய மின்சாரக் கட்டமைப்பு முழுமையாகச் சரிந்துவிட்டதாக கியூபாவின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தை விசாரித்து வருவதாக அந்நாட்டின் மின் கட்டமைப்பு இயக்குநரகம் கூறியுள்ளது.
அத்துடன் மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும், அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சாரம் வழங்கும் அவசரகால “மைக்ரோசிஸ்டம்களை” அவர்கள் ஏற்கனவே செயல்படுத்திவிட்டதாகவும் எரிசக்தி அமைச்சர் வின்சென்ட் டி லா ஓ லெவி Vicente de la O Levy தெரிவித்துள்ளார்.
நாட்டின் பழமையான மின்சார உள்கட்டமைப்பு தேவையை பூர்த்தி செய்ய சிரமப்படுவதால், கடந்த சில ஆண்டுகளாக கியூபாவில் அடுக்கடி மின்வெட்டுகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




