விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி 2025: சிறந்த அணியை அறிவித்த ICC

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. துபையில் நடைபெற்ற  போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம், 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி கைப்பற்றியது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணியை ஐசிசி  அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஐசிசி அறிவித்துள்ள இந்த அணியில் இந்திய அணியிலிருந்து 6 பேர் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியிலிருந்து 4 பேரும், ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து இருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்த அணிக்கு மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணி விவரம்

ரச்சின் ரவீந்திரா, இப்ராஹிம் ஸத்ரான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கிளன் பிலிப்ஸ், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), முகமது ஷமி, மாட் ஹென்றி, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்‌ஷர் படேல்.

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ