ஐரோப்பா

செக் குடியரசில் நூற்றாண்டுகள் பழைமையான வைன் போத்தல்கள் கண்டுப்பிடிப்பு!

செக் குடியரசில் நூற்றாண்டுகளாக மறைத்துவைக்கப்பட்டிருந்த வைன் போத்தல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

பெகோவ் கோட்டையில் உள்ள சிற்றாலயம் ஒன்றின் தரைப்பகுதியில் இந்த வைன் போத்தல்கள் மறைத்து  வைக்கப்பட்டிருந்தன. இவை 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஆஸ்திரியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்பு, பியூஃபோர்ட்-ஸ்பான்டின் (Beaufort-Spontin) குடும்பத்தினரால் இந்த வைன் போத்தல்கள்  மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்தக் குடும்பத்தினர் நாஜி ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேற்படி கோட்டையின் அமைப்பு மற்றும் தன்மை வைன் போத்தல்களை பாதுகாப்பாக வைக்க உதவியதாகவும் கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!