உலகம்

கமரூனில் மண்ணில் புதையுண்ட பேருந்துகள் : 50 பேர் மாயம்!

கமரூனின் மேற்கில் மூன்று பயணிகள் பேருந்துகள் மற்றும் பல சாலைப் பணியாளர்கள் நிலச்சரிவில் சிக்கியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் 50 இற்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்ட நிலையில் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த மழையினால் மண் வலுவிழந்து நிலச்சரிவு ஏற்பட்டதாக கேமரூனின் பொதுப்பணித்துறை அமைச்சர் இம்மானுவேல் நாகனு ஜூமெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேற்கு ஆபிரிக்கா இந்த ஆண்டு பல தசாப்தங்களில் மிகப்பெரும் வெள்ளத்தை அனுபவித்து, 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்