உலகம் செய்தி

போண்டி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – இஸ்லாமிய அரசு வெளியிட்ட அறிக்கை!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு வரவேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய பயங்கரவாத குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், தாக்குதல்தாரிகளை பாராட்டியுள்ளது.

தாக்குதல்தாரிகளை சிங்கங்கள் என வர்ணித்துள்ளதுடன், ‘பெருமையின் ஆதாரம்’ என்றும் புகழ்ந்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்கவில்லை.

இந்த ஜோடி அதன் போதனைகளால் ‘ஈர்க்கப்பட்டிருக்கலாம்’ என்றும் குறிப்பிட்டுள்ளது.

போண்டி கடற்கரையில் ஹனுக்காவின் முதல் நாளைக் கொண்டாடிய யூத மக்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான துப்பாக்கிச்சூட்டில் ஏறக்குறைய 15 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் அவுஸ்திரேலியா வரலாற்றில் 30 வருடங்களில் இடம்பெற்ற மோசமான தாக்குதலாக பதிவாகியுள்ளது.

தாக்குதல்தாரிகளில் ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட நிலையில் மற்றொரு நபர் மருத்துவமனையில் காவல்துறையினரின் கண்காணிப்பில் உள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில், இஸ்லாமிய பயங்கரவாத அரசின் அறிக்கை வந்துள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி