உலகம் செய்தி

மற்றுமொரு கப்பல் மீது தாக்குதல்!!! அதிகரிக்கும் பாதுகாப்பு பதற்றம்

ஏமன் அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

செங்கடலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் ராணுவத்தால் இது முதன்முறையாக உறுதிப்படுத்தப்பட்டது.

மார்ஷல் தீவுகளின் கொடியுடன் சென்ற கப்பல் தாக்குதலுக்கு இலக்காகியதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

கப்பலின் கேப்டனை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் ஏவுகணை ஒன்று வானில் இருந்து வந்து கப்பலின் பின்புறத்தை தாக்கியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதலால் கப்பலுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என்றும், அதன் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது கப்பல் எதிர்ப்பு ஏவுகணை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக செங்கடலில் பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பு தொடர்பில் தற்போதுள்ள அபாய நிலை மேலும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி