செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – முதல் நாள் முடிவில் 325 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து அணி

Ashes Series – England scored 325 runs at the end of the first day

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில்(Brisbane) உள்ள கப்பா(Gabba) மைதானத்தில் ஆரம்பமானது.

அந்தவகையில், பகல் இரவு(Day&Night) போட்டியாக ஆரம்பான இன்றைய போட்டியின் நாணய சுழற்சியை இங்கிலாந்து அணி வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

இந்நிலையில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 74 ஓவர்களுக்கு 9 விக்கெட்களை இழந்து 325 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜாக் கிராலி(Zak Crawley) 76 ஓட்டங்களும் ஜோ ரூட்(Joe Root) 135 ஓட்டங்களும் இறுதியில் அதிரடியாக விளையாடி ஜோப்ரா ஆர்ச்சர்(Jofra Archer) 32 ஓட்டங்களும் குவித்தனர்.

பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணி சார்பில் மிச்சேல் ஸ்டார்க்(Mitchell Starc) 6 விக்கெட்களை கைப்பற்றினார்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி