இலங்கை

இலங்கையில் டெங்கு அபாய வலையங்களாக பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்கள்!

நாடளாவிய ரீதியில் தற்போது 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

இலங்கையில்  இம்மாதத்தின் முதல் வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 883 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 22.1 வீதமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் 21 வீதமான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இம்மாதத்தின் முதல் வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்களின் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்