இலங்கை

10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பாசிப்பயறின் விலை 325 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் பாசிப்பயறின் புதிய விலை 1,225 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாயின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,290 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

பருப்பு கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 299 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், சிவப்பு நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 200 ரூபாவாகவும், நெத்தலி கிலோ ஒன்றின் விலை 1,140 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 200 ரூபாவாகவும், சோயா மீட் கிலோ ஒன்றின் விலை 650 ரூபாவாகவும், சிவப்பு அரிசி கிலோ ஒன்றின் விலை 139 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கடலையின் விலை 540 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.


TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்