இலங்கை செய்தி

இலங்கை மக்களின் சிறு முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணை நடத்த உத்தரவு

இலங்கையில் பொது மக்களால் அளிக்கப்பட்டுள்ள சிறு முறைப்பாடுகள் தொடர்பில், எதிர்வரும் இரண்டு வாரங்களில் விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்துக் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் விடுபட்ட முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் சில வாரங்களுக்குள் குறித்த முறைப்பாடுகளைத் தொடர்பான விசாரணைகளை நினைவுறுத்துமாறு அனைத்துக் பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், நாளாந்தம் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகளை ஓரிரு நாட்களில் விசாரித்து முடிக்குமாறும், அதற்குத் தேவையான அதிகாரிகளைப் பணியில் அமர்த்துமாறும் பதில் காவல்துறை மா அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை